திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர இருஞ்சிறை வண்டினம் பாலை முரல அரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய் விரும்புநாம் செல்லும் இடம். |
16 |
கருங்காலினையுடைய மராமரங்கள் நுணாவொடு மலர, இருஞ்சிறை வண்டினங்கள் பாலையென்னும் பண்ணினை முரல, அரும்பிய முள்ளெயிற்றினையும், அழகிய சொல்லினையுமுடைய மடவாய்! நாம் செல்லும் வழியை விரும்புவாய்.
கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும் வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல் எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ நல்கா துறந்த நமர். |
17 |
கல்லையுடைய வழிமருங்கிலுள்ள குறும்புகளின் வாயிறோறும் அச்சத்தைச் செய்யந் துடிகள் நின்று இயம்பும் வில்லுழுது வாழ்வார் குறும்பின்கண்ணுஞ் செல்வர் கொல்லோ? இலங்கும் வளை மென்றோள் மெலியும்படி பொருட்காதலால் நம்மை நல்காது நீங்கிய நமர்.
கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும் வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு) எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே உதிர்வன போல உள. |
18 |
வெயில் சுடுதலாற் கண்பிளந்து முத்தங்களைச் சொரியாநின்ற வேய்பிணங்குஞ் சோலையையுடைய அகன்ற கானத்துஞ் செல்லக் கருதினார்க் குடன்படுவன போன்றிருந்தனவில்லை; என்னிலங்கு வளையோ கொன்னே நிலத்தின்கட் சிந்துவன போன்றன.
கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம் நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி! முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ வளையொடு சோரும்என் தோள். |
19 |
கலையொடு மான்கள் துன்புற் றிரங்காநிற்கும் மலைவழிகளையுடைய கடறுகளின் இப்பெற்றிப் பட்டுள்ள நிலையஞ்சிச் சுரத்தின்கட் டங்குவர் கொல்லோ? தோழி! முலையோடு சோர்கின்றன போன்ற வண்ணங்கள்; அந்தோ! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற என்றோள்கள்.
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம் பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக் கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள் ஆற்றுங்கொல் ஐய நடந்து. |
20 |
நாணேற்றிய வில்வினையுடைய வேடர் வாழும் கடுஞ்சுரத்தின்கட் பாற்றினஞ் சேரப்படுகின்ற நிழலைக் கண்டஞ்சி, என்மகள் கூற்றன்ன வல்வில்லையுடைய விடலையுடனே சென்றாற்ற வல்லள்கொல்லோ மெல்லிதாக நடந்து.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமொழி, கீழ்க்கணக்கு, ஐம்பது, பதினெண், கொல்லோ, கொன்னே, கலையொடு, என்மகள், நடந்து, நமர், சோர்கின்ற, தோழி, செல்லும், இருஞ்சிறை, சங்க, முரல, அரும்பிய, கல்லதர், மடவாய், வில்லுழுது