இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந் நூலைச் செய்தவர்
பொய்கையார்.
முருகனைப் பயந்த விரிந்த சடையையுடைய பெருமானும், மழுவாயுதத்தையுடைய இயமனைச் சினந்து கொன்ற கொன்றைமாலை புனைந்த வரும் (ஆகிய சிவபெருமான்), இடப்பாகத்தில் உமை:அமர்ந்திருப்ப, (அதனால்) துணையாக எல்லாவுலகங்களும் பெருகி விளங்கின.
கருத்து : சிவபெருமான் ஓர்பாகத்தில் உமையையமர்ந் திருப்ப எல்லாவுலகங்களும் விளங்கினவாதலால் அச்சிவபெருமானை வணங்குவோம்.
முற்காலத்தில், பாரதப்போரில் (கண்ணன் அருச்சுனற்குக் கூறிய கீதையாகிய) அறவுரையை விரும்பிக்கேட்ட கொடிய பேயானது, (அறிவால்) உயர்வுற்று ஆன்றோரவையைப் போய்ச்சேர்ந்த வகையை ஆராய்வீர், அழியாத தருமங்களையுணர்ந்தோன் அறிந்து கூறிய அறநூலினையும் பொருள் நூலினையும் (நீங்கள்) கேட்டு, துன்பத்தை விளைக்கும் பாவங்களை நீக்குக, பொருந்திய நன்னெறி இதுவேயாம்.
கருத்து : கொடிய பேயும் அறவுரை கேட்டுயர்ந்தது; ஆதலால் மக்களாகிய நீங்களும் ஆன்றோரறவுரை கேட்டுப் பாவம் நீக்கி வாழ்க.
செல்வப்பொருளைச்சேர்க்க விரும்புவோர் தம் உடல்நலத்தைப் பேணார், நம் இறைவனருளைப் பெற விரும்புவோர் இயற்கையும் அதுவேயாம், துன்ப முழுவதும் பரவுதற்கு ஏதுவாய நீல நிறமான இருண்டவளையலை யணிந்த மங்கையரின்பத்தை விரும்பியவர், முத்திக்குரிய செயல்கள் ஒன்றும் செய்யார், தம்மாலியன்றவாறு பிறவுயிர்கள் மேல் அருள் புரியாதவர் நிலைமையும் அதுவேயாம்.
கருத்து : பொருளை விரும்புவோரும் இறைவனருளை விரும்புவோரும் உடல் நலம் பேணாமல் எப்போதும் உழைப்பார். மாதர் சிற்றின்பத்தை விரும்புவோரும் பிறவுயிர் மேல் அருள் புரியாதவரும் முத்திக்குரிய செயல் புரியார்.
அழகிய புறாவின் குரல் போலத்தான் கூவியழைத்து அப்புறவாகிய பறவையைப் பிடித்துக் கூட்டிலடைத்தவன், (மறுபிறப்பில் அவனுடைய) காலில் விலங்கு பூட்ட (சிறையிலடைக்க) தன் நிலைமையைக்குறித்துப் புலம்புவன், இவ்வுலகில் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அறியாதவர், திருமாலின் திருவடியின் விரிந்த நிழலையடைவதற்குரிய செயல் புரியார், கொடிய நரகம் என்ற கானகத்தில் தம்மைச் செலுத்துதற்குரிய பாவச் செயல்களைச் செய்வார்.
கருத்து : தாம் செய்யுங் கடமையறியாத மாந்தர் பாவம் பல புரிந்து நரகத்துன்பத்தையடைவர். திருமாலின் திருவடியைச் சேர்தற்குரிய அறவினையைப் புரிவதே மாந்தர் கடமையாம்.
தம்மிடமிருந்து நீங்கிய பொருள்களைக் குறித்து வருந்தாதவரும், சினத்தைமேற்கொள்ளாதவரும், வெகுண்டு பழி மிகுதியாகும்படி அதற்குரிய செயல்களைச் செய்யாதவரும், அறப்பயனை நீக்கிக் கெடுக்கும் முதற் பொருளைத் தமது மனையிற் கொண்டுபோய்ச் சேர்த்துச் செல்வத்தைப் பெருக்காத வரும் (ஆகிய அறிஞர்) துன்பமாகிய கட்டினை யறுப்பார்,
கருத்து : கழிந்த பொருட்கு இரங்காதவர், சினங்கொள்ளாதவர், பழிச்செயல் புரியாதவர், பாவத்தால் பொருள் ஈட்டாதவர் ஆகிய இவரே துன்பத்தின் நீங்கி அறம்புரியும் அறிஞராவர்.
சுருட்டிய பாய்களை விரித்தால். விரித்தபாய்களைச் சுருட்டினால். கப்பல் (மாலுமி குறித்த இடத்திற்குச் செல்வது) போலவும், (அவர்) கூறிய அறிவுரையின் பயன் கெடாமல் நல் வினைகளைச் செய்வார் சிலரே (உள்ளனர்) , தம்மனம் போன போக்காக (தீவினைகளைச்) செய்வார் பலர் (உள்ளனர்) .
கருத்து : அறவுரைகேட்டும் பலர் நன்னெறி யொழுகாது தீயவழியிற் செல்கின்றனரே இதுமிகவும் வருந்தத்தக்கது. எல்லாரும் நல்வாழ்வு வாழப் பழக வேண்டும்.
கடவுள் வாழ்த்து
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான் வாலிழை பாகத்து அமரிய கொழுவேல் கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன் கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே. |
|
- பாரதம் பாடிய பெருந்தேவனார். |
முருகனைப் பயந்த விரிந்த சடையையுடைய பெருமானும், மழுவாயுதத்தையுடைய இயமனைச் சினந்து கொன்ற கொன்றைமாலை புனைந்த வரும் (ஆகிய சிவபெருமான்), இடப்பாகத்தில் உமை:அமர்ந்திருப்ப, (அதனால்) துணையாக எல்லாவுலகங்களும் பெருகி விளங்கின.
கருத்து : சிவபெருமான் ஓர்பாகத்தில் உமையையமர்ந் திருப்ப எல்லாவுலகங்களும் விளங்கினவாதலால் அச்சிவபெருமானை வணங்குவோம்.
நூல்
1. அறப்பால்
அன்று அமரில் சொற்ற அறவுரை வீழ் தீக்கழுது மன்றுயர்ந்து போந்த வகை தேர்மின் - பொன்றா அறம் அறிந்தோன் கண்ட அறம் பொருள் கேட்டல்லல் மறமொறுக்க வாய்த்த வழக்கு. |
1 |
முற்காலத்தில், பாரதப்போரில் (கண்ணன் அருச்சுனற்குக் கூறிய கீதையாகிய) அறவுரையை விரும்பிக்கேட்ட கொடிய பேயானது, (அறிவால்) உயர்வுற்று ஆன்றோரவையைப் போய்ச்சேர்ந்த வகையை ஆராய்வீர், அழியாத தருமங்களையுணர்ந்தோன் அறிந்து கூறிய அறநூலினையும் பொருள் நூலினையும் (நீங்கள்) கேட்டு, துன்பத்தை விளைக்கும் பாவங்களை நீக்குக, பொருந்திய நன்னெறி இதுவேயாம்.
கருத்து : கொடிய பேயும் அறவுரை கேட்டுயர்ந்தது; ஆதலால் மக்களாகிய நீங்களும் ஆன்றோரறவுரை கேட்டுப் பாவம் நீக்கி வாழ்க.
பொருள் விழைவார் போற்றார் உடல்நலம் நம்மை அருள் விழைவார் அதே முழுஎவ்வம் பாய்நீல் இருள் இழையார் வீழ்வார் மேல் பால் ஆக்கார் ஆமாறு அருள்இழையார் தாமும் அது. |
2 |
செல்வப்பொருளைச்சேர்க்க விரும்புவோர் தம் உடல்நலத்தைப் பேணார், நம் இறைவனருளைப் பெற விரும்புவோர் இயற்கையும் அதுவேயாம், துன்ப முழுவதும் பரவுதற்கு ஏதுவாய நீல நிறமான இருண்டவளையலை யணிந்த மங்கையரின்பத்தை விரும்பியவர், முத்திக்குரிய செயல்கள் ஒன்றும் செய்யார், தம்மாலியன்றவாறு பிறவுயிர்கள் மேல் அருள் புரியாதவர் நிலைமையும் அதுவேயாம்.
கருத்து : பொருளை விரும்புவோரும் இறைவனருளை விரும்புவோரும் உடல் நலம் பேணாமல் எப்போதும் உழைப்பார். மாதர் சிற்றின்பத்தை விரும்புவோரும் பிறவுயிர் மேல் அருள் புரியாதவரும் முத்திக்குரிய செயல் புரியார்.
கோலப் புறவில் குரல்கூவிப் புள்சிமிழ்த்தோன் காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின் விரிநிழல் தாம் எய்தார் தீப்பழுவத்து உய்ப்பர் உரிமை இவண்ஓரா தார். |
3 |
அழகிய புறாவின் குரல் போலத்தான் கூவியழைத்து அப்புறவாகிய பறவையைப் பிடித்துக் கூட்டிலடைத்தவன், (மறுபிறப்பில் அவனுடைய) காலில் விலங்கு பூட்ட (சிறையிலடைக்க) தன் நிலைமையைக்குறித்துப் புலம்புவன், இவ்வுலகில் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அறியாதவர், திருமாலின் திருவடியின் விரிந்த நிழலையடைவதற்குரிய செயல் புரியார், கொடிய நரகம் என்ற கானகத்தில் தம்மைச் செலுத்துதற்குரிய பாவச் செயல்களைச் செய்வார்.
கருத்து : தாம் செய்யுங் கடமையறியாத மாந்தர் பாவம் பல புரிந்து நரகத்துன்பத்தையடைவர். திருமாலின் திருவடியைச் சேர்தற்குரிய அறவினையைப் புரிவதே மாந்தர் கடமையாம்.
கழிவிரக்கம் கொள்ளார் கதழ் வாளார் வேர்த்துப் பழிமுறுகக் கோடார் பயன் பேர்த்து - அழிமுதலை இல்லம் கொண்டு ஆக்கார் இடும்பைத் தளை தணப்பர் நல்லறனை நாளணி கொள்வார். |
4 |
தம்மிடமிருந்து நீங்கிய பொருள்களைக் குறித்து வருந்தாதவரும், சினத்தைமேற்கொள்ளாதவரும், வெகுண்டு பழி மிகுதியாகும்படி அதற்குரிய செயல்களைச் செய்யாதவரும், அறப்பயனை நீக்கிக் கெடுக்கும் முதற் பொருளைத் தமது மனையிற் கொண்டுபோய்ச் சேர்த்துச் செல்வத்தைப் பெருக்காத வரும் (ஆகிய அறிஞர்) துன்பமாகிய கட்டினை யறுப்பார்,
கருத்து : கழிந்த பொருட்கு இரங்காதவர், சினங்கொள்ளாதவர், பழிச்செயல் புரியாதவர், பாவத்தால் பொருள் ஈட்டாதவர் ஆகிய இவரே துன்பத்தின் நீங்கி அறம்புரியும் அறிஞராவர்.
திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல் உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த பயன்தவா செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்து இயன்றவா செய்வார் பலர். |
5 |
சுருட்டிய பாய்களை விரித்தால். விரித்தபாய்களைச் சுருட்டினால். கப்பல் (மாலுமி குறித்த இடத்திற்குச் செல்வது) போலவும், (அவர்) கூறிய அறிவுரையின் பயன் கெடாமல் நல் வினைகளைச் செய்வார் சிலரே (உள்ளனர்) , தம்மனம் போன போக்காக (தீவினைகளைச்) செய்வார் பலர் (உள்ளனர்) .
கருத்து : அறவுரைகேட்டும் பலர் நன்னெறி யொழுகாது தீயவழியிற் செல்கின்றனரே இதுமிகவும் வருந்தத்தக்கது. எல்லாரும் நல்வாழ்வு வாழப் பழக வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், உரைத்த, செய்வார், ஆக்கார், அறம், சங்க, பொருள், விழைவார்