முதன்மை பக்கம் » ஆன்மிகம் » திருவிவிலியம் - பழைய ஏற்பாடு
பழைய ஏற்பாடு - திருவிவிலியம்
ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் பழைய உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள்.
பழைய ஏற்பாட்டில் - 39/46 (முப்பத்து ஒன்பது/நாற்பத்து ஆறு) புத்தகங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டை எபிரேய விவிலியம் (Hebrew Bible) எனவும் கூறுவர். யூத விவிலியமான பழைய ஏற்பாட்டை யூதர்கள் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்:
- 1) தோரா(Torah) - சட்டங்கள் - (Ta)
- 2) நெவீம்(Nevi'm) - தீர்க்கர்கள் - (Na)
- 3) கெதுவிம்(Ketuvim) - எழுத்துக்கள் - (Kh)
தோரா
தோரா என்னும் எபிரேயச் சொல் படிப்பினை, போதனை, திருச்சட்டம், நெறிமுறை என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை மோசே எழுதிய நூல்கள் எனவும் ஐந்நூல்கள் (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படுகின்றன:
1.ஆதியாகமம், 2.யாத்திராகமம், 3.லேவியராகமம், 4.எண்ணாகமம், 5.உப ஆகமம் இந்த 5 நூல்கள் பென்டாடச் என அதாவது முதலைந்து நூல்கள் என்று பெயர் படும்.
நெவீம்
இச்சொல் நவி என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது (נְבִיא - navi). அதன் பொருள் இறைவாக்கினர் (தீர்க்கதரிசி) என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 31 உள்ளன. அவை முன்னைய தீர்க்கர்கள் (6 நூல்கள்), பின்னைய தீர்க்கர்கள் (15 நூல்கள்) கொண்டன.
முன்னைய தீர்க்கர்கள் :
1.யோசுவா, 2.நீதிபதிகள், 3.1 சாமுவேல், 4.2 சாமுவேல், 5.1 அரசர், 6.2 அரசர்
பின்னைய தீர்க்கர்கள் :
இப்பிரிவில் 3 பெரிய தீர்க்கர்கள் நூல்களும் 12 சிறிய தீர்க்கர்கள் நூல்களும் முறையே அடங்கும். அவை: 1.இசையாஸ், 2.எரேமியாஸ், 3.எசேக்கியேல், 4.ஓசே, 5. யோவேல், 6.ஆமோஸ், 7.அப்தியாஸ், 8.யோனாஸ், 9.மிக்கேயாஸ், 10.நாகும், 11.அபாக்கூக், 12.செப்போனியாஸ், 13.ஆகாய், 14.சக்கரியாஸ், 15.மலாக்கியாஸ்
கெதுவிம்
கெதுவிம் என்னும் எபிரேயச் சொல் எழுத்துப் படையல் நூல் தொகுப்பு என்னும் பொருள் தரும் (כְּתוּבִים, "Writings"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன.
1.1 நாள் ஆகமம், 2.2 நாள் ஆகமம், 3.எஸ்ரா, 4.நெகேமியா, 5.எஸ்தர், 6.யோபு, 7.தானியேல், 8.சங்கீதங்கள், 9.பழமொழி, 10.உன்னத சங்கீதம், 11.புலம்பல், 12.ரூத்து, 13.சங்கத்திருவுரை
தள்ளுபடி புத்தகங்கள்
கத்தோலிக பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் தரப்படுகின்றன. இவை எபிரேயர்களால் நிராகரிக்கப்பட்டதால் மறுப்பணி சர்ச்சுகள் இவற்றை தங்கள் பதிப்புகளில் சேர்ப்பதில்லை. அவை 1.தொபியாசு, 2.யூதித், 3.ஞானம், 4.சீராக், 5.பாரூக், 6.I மக்கபே, 7.II மக்கபே
- ஆதியாகமம் (Genesis)
- யாத்திராகமம் (Exodus)
- லேவியராகமம் (Leviticus)
- எண்ணாகமம் (Numbers)
- உப ஆகமம் (Deuteronomy)
- யோசுவா ஆகமம் (Josue)
- நீதிபதிகள் ஆகமம் (Judges)
- ரூத்து ஆகமம் (Ruth)
- 1 சாமுவேல் ஆகமம் (1 Samuel)
- 2 சாமுவேல் ஆகமம் (2 Samuel)
- 1 அரசர் ஆகமம் (1 Kings)
- 2 அரசர் ஆகமம் (2 Kings)
- 1 நாள் ஆகமம் (1 Chronicles)
- 2 நாள் ஆகமம் (2 Chronicles)
- எஸ்ரா ஆகமம் (Esdras)
- நெகேமியா ஆகமம் (Nehemiah)
- தொபியாசு ஆகமம் (Tobias)
- யூதித் ஆகமம் (Judith)
- எஸ்தர் ஆகமம் (Esther)
- யோபு ஆகமம் (Job)
- சங்கீதங்கள் (Psalm)
- பழமொழி ஆகமம் (Proverbs)
- சங்கத்திருவுரை ஆகமம் (Ecclesiastes)
- உன்னத சங்கீதம் (Song of Solomon)
- ஞான ஆகமம் (Wisdom)
- சீராக் ஆகமம் (Sirach)
- இசையாஸ் ஆகமம் (Isaias)
- எரேமியாஸ் ஆகமம் (Jeremias)
- புலம்பல் ஆகமம் (Lamentations)
- பாரூக் ஆகமம் (Baruch)
- எசேக்கியேல் ஆகமம் (Ezechiel)
- தானியேல் ஆகமம் (Daniel)
- ஓசே ஆகமம் (Hosea)
- யோவேல் ஆகமம் (Joel)
- ஆமோஸ் ஆகமம் (Amos)
- அப்தியாஸ் ஆகமம் (Obadiah)
- யோனாஸ் ஆகமம் (Jonah)
- மிக்கேயாஸ் ஆகமம் (Micah)
- நாகும் ஆகமம் (Nahum)
- அபாக்கூக் ஆகமம் (Habakkuk)
- செப்போனியாஸ் ஆகமம் (Zephania)
- ஆகாய் ஆகமம் (Haggai)
- சக்கரியாஸ் ஆகமம் (Zachariah)
- மலாக்கியாஸ் ஆகமம் (Malachi)
- 1 மக்கபே ஆகமம் (1 Maccabees)
- 2 மக்கபே ஆகமம் (2 Maccabees)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழைய ஏற்பாடு - திருவிவிலியம், ஆகமம், பழைய, நூல்கள், என்னும், ஏற்பாடு, தீர்க்கர்கள், நாள், சாமுவேல், மக்கபே, அரசர், கெதுவிம், எனவும், நூல்களும், தோரா, எபிரேயச், புத்தகங்கள், திருவிவிலியம், சொல், பொருள், தரும், நெகேமியா, எஸ்ரா, சக்கரியாஸ், அபாக்கூக், நாகும், செப்போனியாஸ், ஆகாய், எஸ்தர், மலாக்கியாஸ், புலம்பல், தொபியாசு, சங்கத்திருவுரை, யூதித், சீராக், பாரூக், ரூத்து, மிக்கேயாஸ், சங்கீதங்கள், தானியேல், பழமொழி, உன்னத, சங்கீதம், யோபு, நீதிபதிகள், இப்பிரிவில், நெவீம், அடங்கும், ஆதியாகமம், யாத்திராகமம், எபிரேய, ஏற்பாட்டை, ஆன்மிகம், உடன்படிக்கை, கடவுள், ஏற்பாட்டில், லேவியராகமம், எண்ணாகமம், எசேக்கியேல், யோவேல், ஆமோஸ், அப்தியாஸ், எரேமியாஸ், இசையாஸ், இறைவாக்கினர், முன்னைய, பின்னைய, யோசுவா, யோனாஸ்