திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
2, பாலை
கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப் பொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார் அழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி வழிநீர் அறுத்த சுரம். |
11 |
செங்கழுநீர் மலர்போன்ற கண்ணினையுடையாய்! அவர் பிரிந்ததால் நிகழும் அலர் நிற்க, பொருண்மேல் நீர்மையையுடையராய் நங்காதலர் முன் சொல்லிய சொல்லைப் பொய்த்து நம்மை நீங்குவார் போனார்; அங்குள்ளார் அழியும் நீர்மையவாகிப் பசையறு தனக்குத் தோன்றிப்போம்வழியின்கண் நீரறுத்த சுரங்களின்கண்ணே.
முரிபரல வாகி முரணழிந்து தோன்றி எரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் ! அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் தெரிவார்யார் தேரும் இடத்து. |
12 |
முரிபரந்த பருக்கையினையுடையவாய் வலியழிந்து தோன்றி, எரிபரந்த கானத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர்! அரிபரந்த உண் கண்ணாள் ஆற்றாளென்னுந் திறத்தை நும்மைப்போல, பிறரறிகிற்பார் யார் ஆராயுமிடத்து?
ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர் மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க் கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம் பொலந்தொடீஇ பொய்த்த குயில். |
13 |
ஓங்கிய குருந்தோடே கூட அரும்புகளையீன்று பாங்கராகிய மராஅமரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக் கலந்து சென்ற நங்காதலர் வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின, குயில்கள் : பொலந்தொடீ!
புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம் செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும் பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார் வருநசை பார்க்கும்என் நெஞ்சு. |
14 |
புன்குகள் பொரிபோல மலரப் பூந்தண் பொழில்களெல்லாஞ் செங்கட் குயில்கள் கூவுகின்ற போழ்துகண்டும், முன்பு பொருணசையையுடைய ஊக்கந்துரப்ப நம்மை நீங்கினர் வருநசையைப் பாராநின்றது என் நெஞ்சு.
சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும் நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி ! முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து) ஆர்பொருள் வேட்கை அவர். |
15 |
சிறிய புல்லிய புறவினொடு சிறிய புல்லூறு வெகுளும் வழியரிய நீள்சுரத்தின்கட்டங்குவர் கொல்லோ? தோழி! தளிரினது அழகு போன்றிருந்த என்மேனி பசப்ப, நம்மேலுள்ள அருளினை ஒழிந்து நிறைந்த பொருளினை வேட்ட வேட்கையை யுடையவர.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, தோன்றி, இலக்கியங்கள், திணைமொழி, கீழ்க்கணக்கு, பதினெண், ஐம்பது, நெஞ்சு, குயில்கள், பூந்தண், பசப்ப, சிறிய, மலர்ந்தன, தோழி, நங்காதலர், வாகி, சங்க, அவர், நம்மை, எரிபரந்த, அரிபரந்த