முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மகாகவி பாரதியார் நூல்கள் (Subramaniya Bharathiyar Books)
மகாகவி பாரதியார் நூல்கள் (Subramaniya Bharathiyar Books)
சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி, விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டி, அவர்கள் உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியவர் மகாகவி பாரதியார்.
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
- தேசிய கீதங்கள் (Patriotic Songs)
- ஞானப் பாடல்கள் (Philosophical Songs)
- பல்வகைப் பாடல்கள் (Miscellaneous Songs)
- பக்திப் பாடல்கள் (Devotional Songs)
- கண்ணன் பாட்டு (Kannan Song)
- குயில் பாட்டு (Kuyil Song)
- பாஞ்சாலி சபதம் (Panchali's Vow)
- சுய சரிதை (Autobiography)
- பகவத் கீதை முன்னுரை (Commentary on Gita)
- சந்திரிகையின் கதை (Chandrika's Story)
தேடல் தொடர்பான தகவல்கள்:
Subramaniya Bharathiyar Books, மகாகவி பாரதியார் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், கந்தர் அந்தாதி, Kanthar Anthathi, கந்தர் அலங்காரம், Kanthar Alankaram, கந்தர் அனுபூதி, Kanthar Anupoothi, சேவல் விருத்தம், Seval Virutham, திருஎழுகூற்றிருக்கை, Thiruvezhukoorrirukkai, திருப்புகழ், Thiruppugazh,திருவகுப்பு, Thiruvaguppu, மயில் விருத்தம், Mayil Virutham, வேல் விருத்தம், Vel Virutham