முதன்மை பக்கம் » எங்களைப் பற்றி
எங்களைப் பற்றி (About Us)
ஓர் இனத்தின் வளர்சியும், வாழ்வும் அந்த இனம் பேசுகின்ற மொழியைப் பொருத்தே அமைகிறது. அதுபோல ஒரு மொழியின் வளர்சியானது அம்மொழியில் உருவாகும் இலக்கிய
நூல்கள் மற்றும் அறிவியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயனுள்ள நூல்களைப் பொருத்தே அமையும். மேலும் ஒரு மொழி வளர்ச்சியடையும் போது அந்த இனமும் வளர்ச்சியடையும். ஒரு மொழியை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழியக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
தமிழ் இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தொன்மை ஆகியவை நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அடங்கியிருக்கிறது. நம் தமிழினத்தை காலச்சூழலிலிருந்தும், அன்னியர் ஆத்திக்கத்திலிருந்தும் காப்பாற்ற கட்டாயம் நாம் ஒவ்வொறுவரும் மொழி மற்றும் இன உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
கேஆர்.சக்தி வேல் |
தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது. நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்ச்சுரங்கம்.காம் இணையதளம்.
பனப்பாக்கம் கு.சீத்தா |
பாவேந்தர் பாரதிதாசனின் பரம்பரையில் வந்த சிந்தனைக் கவிஞர். பனப்பாக்கம் கு.சீத்தா அவர்கள் தமிழாசிரியராக இருந்து எனக்கு தமிழ்ப் பற்றையும்,
தமிழர் வரலாற்றினை அறியும் ஆர்வத்தினையும் என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே
தொடங்கி வைத்தவர். இன்றளவும் எம்முடன் இணைந்து தமிழ்ப் பணியாற்றுபவர். மறைந்த கவிஞர் சுரதாவின் இனிய நண்பர். மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், உவமைக் கவிஞர் சுரதா, சிந்தனைக் கவிஞர் சீத்தா என்ற வரிசையில் தமிழன்னையின் தவப்புதல்வர். இவரின் மாணாக்கர் நான் என்பது என் தவப் பயனே!
என்னுடன் இந்த இணையதளம் உருவாக பாடுபட்ட திரு.பி.பெருமாள், திரு.இராம.கணேசன் ஆகியோரின் சிறப்பான தமிழ்ப் பணியும் பாராட்டுக்குறியது.
இங்ஙணம்,
கேஆர்.சக்தி வேல்,
27/58 சந்தை தெரு,
தியாகதுருகம்,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி : +91 8248977695
மின்னஞ்சல் : [email protected]
தேடல் தொடர்பான தகவல்கள்:
எங்களைப் பற்றி - About Us