முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » ஐம்பெருங் காப்பியங்கள்
ஐம்பெருங் காப்பியங்கள் (Aimperum Kaappiyangal)
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளை முழுமையாகக் கொண்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.
இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
நூல்கள் :
தேடல் தொடர்பான தகவல்கள்:
Aimperum Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள்