ஒளியியல் - 3D படங்கள்
இந்த வண்ணப் படங்களில் ஒரு முப்பரிமான படம் மறைந்துள்ளது. இப் படங்களை நீங்கள் கணினியின் திரை மூலமாகவோ அல்லது பதிப்பின் மூலமாகவோ பார்க்கலாம். பதிப்பு வண்ணப் படமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
பார்க்கும் முறை:
உங்கள் முகத்திற்கு நேராக படத்தினை வைத்து செங்குத்தாக உற்று நோக்கவும். முதல் படத்திற்க்கு மேலாக உள்ள இரு சிகப்பு கட்டமானது, முதலில் நான்கு கட்டமாக தெரியும். பின்பு மெதுவாக நடுவில் உள்ள இரு கட்டங்கள் இணைந்து மூன்று கட்டங்களாக தெரியும். இந்த நிலைதான் முப்பரிமாணா நிலை. இப்போது படத்தில் ஏதாவது ஒரு படம் முப்பரிமாண வடிவில் காட்சி அளிக்கும்.
பயன்கள்:
பொதுவாக இப் படங்கள் பொழுது போக்காக பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இது உங்களுடைய பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்யும். மேலும் உங்கள் மனதிற்கும், உடலுக்கும் அமைதியை அளிக்கும்.
- கேஆர்.சக்தி வேல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
3D Pictures - 3D படங்கள் - Optics - ஒளியியல் - Science - அறிவியல்