முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் (Kumarakurubarar Books)
ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் (Kumarakurubarar Books)
ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்த குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டி வணங்க, முருகனின் இலை விபூதிப் பிரசாதம் பெற்றுப் பின் பேசும் திறனை அடைந்தவர்.
கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர், காசிக்குப் பயணமானார்.
அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாழிலும் நிறுவினார்.
மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக் கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.
- கயிலைக் கலம்பகம் (Kailai Kalambakam) - மறைந்த தமிழ் நூல்
- காசிக் கலம்பகம் (Kasi Kalambakam)
- காசித் துண்டி விநாயகர் பதிகம் (Kasi Thundi Vinayagar Pathigam ) - மறைந்த தமிழ் நூல்
- சகலகலாவல்லி மாலை (Sakalakalavalli Maalai )
- சிதம்பர மும்மணிக் கோவை (Chidambara Mummanikovai)
- சிதம்பரச் செய்யுட் கோவை (Chidambara Seiyuttkovai)
- திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா (Thirusenthur Kanthar Kalivenba)
- திருவாரூர் நான்மணிமாலை (Tiruvarur Nanmani Malai)
- தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை (Thillai Sivakamiyammai Irattai Mani Malai)
- நீதிநெறி விளக்கம் (Nithineri Vilakkam)
- பண்டார மும்மணிக் கோவை (Pandara Mummanik Kovai)
- மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை (Madurai Meenakshiyammai Irattai Mani Malai)
- மதுரை மீனாட்சியம்மை குறம் (Madurai Meenakshiyammai Kuram)
- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் (Madurai Meenakshiyammai Pillai Thamizh)
- மதுரைக் கலம்பகம் (Madurai Kalambakam)
- வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் (Vaitheesvaran Koil Muththukumaaraswamy Pillai Thamizh)
தேடல் தொடர்பான தகவல்கள்:
Kumarakurubarar Books, ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், கந்தர் அந்தாதி, Kanthar Anthathi, கந்தர் அலங்காரம், Kanthar Alankaram, கந்தர் அனுபூதி, Kanthar Anupoothi, சேவல் விருத்தம், Seval Virutham, திருஎழுகூற்றிருக்கை, Thiruvezhukoorrirukkai, திருப்புகழ், Thiruppugazh,திருவகுப்பு, Thiruvaguppu, மயில் விருத்தம், Mayil Virutham, வேல் விருத்தம், Vel Virutham