முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்
புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் (Bharathidasan Books)
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 ஜூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன
கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.
- தமிழியக்கம் (Thamizhiyakkam)
- குடும்ப விளக்கு (Kudumpa Vilakku)
- இருண்ட வீடு (Irunda Veedu)
- கண்ணகி புரட்சிக் காப்பியம் (Kannaki Puratchi Kappiyam)
- பாண்டியன் பரிசு (Pandiyan Parisu)
- இளைஞர் இலக்கியம் (Ilainjar Ilakkiyam)
- அழகின் சிரிப்பு (Azakin Cirippu)
- மணிமேகலை வெண்பா (Manimekalai Venba)
- இசை அமுது (Isai Amutu)
- எதிர்பாராத முத்தம் (Etir Parata Muttam)
- பாரதிதாசன் கவிதைகள் - முதற் தொகுதி (Bhrathidasan Kavitaikal - I Volume)
- பாரதிதாசன் கவிதைகள் - இரண்டாம் தொகுதி (Bhrathidasan Kavitaikal - II Volume)
- பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி (Bhrathidasan Kavitaikal - III Volume)
- புரட்சிக்கவி (Puratchi Kavi)
- தமிழச்சியின் கத்தி (Tamizhachiyin Katti)
- காதல் நினைவுகள் (Kathal Ninaivugal)
- சஞ்சீவி பர்வதத்ததின் சாரல் (Sanjeevi Parvathathin Saral)
- வீரத்தாய் (Veerathaai)
- சிறு காப்பியம் (Sirukappiyam)
தேடல் தொடர்பான தகவல்கள்:
Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்