திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி சுருங்கொடி முல்லை கவின முழங்கிப் பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார் பொருந்த நமக்குரைத்த போழ்து. |
26 |
பெருங்கடலைப் பருகிய அழகுகொண்ட முகில், கருங்கொடி முல்லைகள் அழகுபெறும்படி முழங்கிப் பெரும் பெயல் தாழாநிற்க, பெயர்ந்து வருவேமென்று காதலர் குறிசெய்தாராகலால், நமக்குப் பொருந்த அவருரைத்த கால மிது.
ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய் பாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து மாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை செயவர் செய்த குறி. |
27 |
ஆயர்கள் இனத்தை ஊரின்கண்ணே பெயர்வித்து ஆம்பற்குழலை மருவ, ஒலிக்குங் கடலுள் நீரை முகந்து பரக்க முழங்குதலான், மாயிரு ஞாலமெல்லாம் இருள்மிக்கு மயங்கும் மாலைப்பொழுது நம்மைப் பிரிந்து சேயராயினார் வருவதற்குச் சொல்லிய குறி.
அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்தி முதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக் கதிர்மறை மாலை கனைபெயல் தாழப் பிதிரும் முலைமேல் கணங்கு. |
28 |
அலைகடலைப் பருகி அதிராநின்ற குரலினையுடைய உருமேற்றோடு முதிர்ந்த மணிநாகங்கள் வருந்தும் வகை முழங்கி, வெயில்மறைந்த மாலைப் பொழுது மிக்க பெயல் தாழ்தலான், இவள் முலைமேற் சுணங்குகள் பிதிர்ந்தாற்போல இனிப்பாக்கும்.
கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக் காடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈன ஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்! போதராய் காண்பாம் புறவு. |
29 |
காந்தளின் மிக்க அரும்புகள் கோளராவிற்கு மாறாகக் கருதிக் காடெல்லாங் கார்ப்பருவத்தைச் செய்து முல்லையரும்புகளை யீன, வழிகளெல்லாம் நுண்ணிய அறல் மணல் மேலொழுகுதலால், அணியிழையை யுடையாய்! புறவினைக் காண்பாம் போதராய்.
அருளி அதிரக் குருகிலை பூப்பத் தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற வரிவனைத் தோளி! வருவார் நமர்கொல் பெரிய மலர்ந்த(து)இக் கார். |
30 |
மலையருவிகள் வந்து முழங்க, குருகிலைகள் பூப்ப, தெரிந்த ஆனினங்கள் இனிய பாலைப்பொழிய, வரிவளைத் தோளினையுடையாய்! நமர் வருவார் கொல்லோ? பெரியவாயுள்ள அழகுகளை மலர்ந்தது இக்கார் ஆதலான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், ஐம்பது, திணைமொழி, கீழ்க்கணக்கு, பதினெண், முழங்கிப், மிக்க, போதராய், குறி, வருவார், காண்பாம், தாழப், சங்க, முல்லை, பொருந்த, பெயல், மாயிரு