திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
5. நெய்தல்
நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன் கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான் செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்! ஐயகொல் ஆன்றார் தொடர்பு. |
41 |
நெய்தற்படப்பை நிறைகழித் தண் சேர்ப்பன் தாழை சூழ்ந்த கானலின்கண் நம்மைக்கண்ட முதனாள் போலானான்; அவனாற் செய்யப்பட்ட குறிகளும் பிழைத்தன; ஆயிழையாய்! அமைந்த நட்புச் செறிந்தன்றாகாதே யிருப்பது.
முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை தத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப! சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய் வித்தகப் பைம்பூணின் மார்பு. |
42 |
முத்தம்போல வரும்பாநின்ற முடத்தாண் முதுபுன்னையின்கண் வந்து தத்தாநின்ற திரைகள் துளங்காநின்ற தண்ணங் கடற் சேர்ப்பனே! எழுதிய சித்திரப்பூங்கொடி யன்னாட்கு நின்னருளினாலே நல்காய்; வித்தகப் பைம்பூணையுடைய நின் மார்பினை.
எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ நெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன் அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில் செறிவுஅறா செய்த குறி. |
43 |
எறிசுறாவையுடைய நீள்கடலின்கண்ணுள்ள வோதம் வந்துலாவ வரிவரியாயிருந்துள்ள மேனியையுடைய இறாக்கள் சுழன்று திரிதருஞ் சேர்ப்பன் நின்னறிவின்கண் நீங்காதிருந்த இன்சொல் அணியிழையை யுடையாய்! நின்மனையின் புறத்து அச்சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முளவாகா நின்றன.
இளமீன் இருங்கழி ஓதம் உலாவ மணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம் நினைநீர்மை இல்லா ஒழிவு. |
44 |
இனமீன்களையுடைய இருங்கழியின்கண்ணே வந்து ஓதங்களுலாவ நீலமணிபோன்ற நீர்பரக்குந் துறைவனே! தகுவதொன்றோ குணத்தன்மை குன்றாக் கொடியன்னாள் திறத்து நினையு நீர்மையின்றி யொழிதல் நினக்கு ?
கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம் படமணி அல்குல் பரதர் மகளிர் தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி! உடலுள் உறுநோய் உரைத்து. |
45 |
கடல் கொழித்துச் சிந்திய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற அழகிய அல்குற் பரதர் மகளிர் மாலையாகச் சேர்த்து விளையாடும் துறைவனே! என் தோழி மறுகாநிற்கும் தன்னுறு நோயை எனக் குரைத்து.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், செய்த, சேர்ப்பன், கீழ்க்கணக்கு, ஐம்பது, பதினெண், திணைமொழி, இன்சொல், துறைவ, குன்றாக், கதிர்மணி, மகளிர், பரதர், உலாவ, துறைவனே, கொடியன்னாள், முத்தம், நிறைகழித், நெய்தல், சங்க, போலானான், ஆயிழையாய், வந்து, வித்தகப், தண்ணங், ஓதம்