கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி
வற்புறுத்தியது.
குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன ........... சேவல் எனப்பிடவாம் ஏறி பொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய் அரிதவர் வாரா விடல். |
26 |
பொன்போன்ற உருவத்தை யுடைய தலைவியே! செங்காந்தட் செடிகளின் கூர்மையான அரும்புகள் குருதி போன்ற பூக்களைக் காட்ட ... ...சேவல் என (அப்பூக்களின் தோற்றத்தை) தன்னோடு போர் செய்யவரும் மாறுபட்ட சேவலென்று கருதி பிடவஞ்செடியின் மேலேறி நின்று (உற்று நோக்கி) சுடுகின்ற நெருப்பு என்று எண்ணி அஞ்சியோடுகின்ற (இயல்புடையது கானம்) நம் தலைவர் வாராமலிருப்பது அருமையானது (வருவர் என்றாள்)
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
....................................................................... .............. ................ ஒல்கப் புகுதரு கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி ஊர்தரு மேனி பசப்பு. |
27 |
தளர்ச்சியாக நுழைகின்ற மழைபெய்யுமாலைக்காலத்தில், கலந்தார் வரவு உள்ளி - என்னை யணைந்த காதலர் வருவர் என்பதை நினைந்து என் மேனியிற் பசலை பரவுகின்றது.
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
....................................................................... ................. பெய்த புறவில் கடுமான்தேர் ஒல்லைக் கடவாவார் இவர்காணின் காதலர் சில்........................................................... |
28 |
மழை பெய்த முல்லை நிலத்தில் வேகமாகிய பரிகள் பூட்டப்பட்ட தேரினை விரைவிற் செலுத்துவார் உனது காதலர் இவரே அறிவாயாக.
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
.............. .............. ............... குருந்தலரப் பீடார் இரலை பிணைதழுவக் காடாரக் கார்வானம் வந்து முழங்................ ......... ............ ....................... |
29 |
குருந்த மலங்களின் மலர்கள் மலர பெருமை பெற்ற ஆண்மான்கள் பெண்மான்களைக் கூடியின்பமுற காடுகள் நீர் நிறைந்து செழிக்கும்படி கரிய மேகங்கள் வந்து இடித்து மழை பொழிய.
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
.............. ............... ................
................ .............. .................. ............. ............... கொன்றை கொடுகுழல் ஊதிய கோவலர் மன்றம் புகுதரும் போழ்து. |
30 |
கொன்றைக் காயைத் துளைத்துக் குழலாகப்பண்ணி வாய்வைத்து ஊதி வருகின்ற ஆயர்கள் தம்பசுக்கள் நிற்கும் மன்றத்திற் புகுகின்ற காலமாகிய மாலையில்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தலைவர், காட்டி, தோழி, வற்புறுத்தி, ஆற்றுவித்தல், பருவம், வருவார், இலக்கியங்கள், பதினெண், காதலர், கீழ்க்கணக்கு, வருவர், கைந்நிலை, பெய்த, வந்து, சேவல், சங்க, குருதி, கலந்தார்