கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு
பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி
வற்புறுத்தித் தேற்றியது.
............. வுறையு மெல்லென் கடத்துக் கடுஞ்சின வேங்கை கதழ்வேழம் சாய்க்கு ........................................... ........................................... நமர். |
16 |
தங்கியிருக்கும் மெல்லிய காட்டுவழியில் மிகுந்த கோபத்தையுடைய புலிகள் வேகம் பொருந்திய யானையை யடித்துக் கொல்லும் நம்தலைவர்.
பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி
வற்புறுத்தித் தேற்றியது.
கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம் மடமா இரும்பிடி வேழ மரு............. ....................ண்ட உண்கண் ணுள்நீர் ........................................... |
17 |
கடமான் என்ற விலங்குகள் முரிந்து விரைந்து செல்கின்ற பரற்கற்களையுடைய வழிகள் பொருந்திய பாலைவனத்தில் இளமையான கரிய பெரிய பெண்யானைகளோடு ஆண்யானைகள் கூடும் நீண்ட மையுண்ட கண்களில் உள்ளிருந்து வரும் கண்ணீர்.
பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி
வற்புறுத்தித் தேற்றியது.
ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை ஏமாண் சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும் தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும். |
18 |
காட்டுப் பசுக்கள் (மரையா) கதறுகின்ற (ஒலிக்கின்ற) அழகிய மலையையடுத்த அருமையான வழியில் அம்பும் மாட்சிமைப்பட்ட வில்லும் உடைய வேடர்களைக்கண்டு கூட்டமாகிய விலங்குகள் முறித்தோடுகின்ற பெருமையில்லாத கொடிய பாலை நிலத்துப் பிரிந்து சென்ற நம் தலைவர் வரவினை யறிந்து குறி கூறுவதால் பெருமை பொருந்திய வாயையுடைய பல்லியொலிக்கின்றது. (ஆதலால் நம் தலைவர் இன்னேவருவர், வருந்தாதே எனத்தோழி கூறினள்)
பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி
வற்புறுத்தித் தேற்றியது.
அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல் செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும் பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர் நுதற்கு இவர்ந் தேறும் ஒளி. |
19 |
அரக்கினது நிறம் போன்ற செந்நிறம் பொருந்திய ஓமை மரத்தின் புள்ளிபட்ட நிழலில் களிப்பில்லாத கொடிய யானைகள் போய் உறங்கிக்கொண்டு நிற்கும் இயல்பு பொருந்திய பருக்கைக்கற்களையுடைய காட்டு வழியாக மிகுந்த பொருளீட்டுவது கருதிச்சென்ற நம் தலைவர் நினது நெற்றியில் பசலை நீங்கி ஒளிபடர்ந்து ஏறுகின்றது ஆதலால் இப்போதே வந்து சேர்வர் (அது குறித்து வருந்தாதே என்று வற்புறுத்தினள் தோழி)
பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது.
.............................................................. ........................................... வீழ்க்கும் ஓவாத வெங்கானம் சென்றார்........ ..............வார் வருவார் நமர். |
20 |
ஒழியாத வெப்பத்தை யுடைய காட்டின் வழியாகப் பிரிந்து சென்ற நம் தலைவர் நம் தலைவர் இனி வருவார் (ஆதலால் வருந்தாதே என்றனள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, தலைவர், பொருந்திய, தோழி, தலைவியைத், வற்புறுத்தித், வேறுபட்ட, தேற்றியது, இலக்கியங்கள், பிரிவிடை, கீழ்க்கணக்கு, வருந்தாதே, ஆதலால், பதினெண், சென்றார், கைந்நிலை, நிற்கும், சென்ற, வருவார், நமர், சங்க, மிகுந்த, விலங்குகள், கொடிய, பிரிந்து