கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
.............. .............. ..................
.............. ................ ............. ................. .............. .............. .............. ................ வானம் வந்து துளிவழங்கக் கண்டு. |
31 |
மேகங்கள் விண்ணின் மேல் வந்து மழைத்துளிகள் பெய்வதை நோக்கி.
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
காரெதிர் வானம் கதழ்எரி சி......... ............... ................. .............. .............. .................. ...........லக மெழுநெஞ்சே சொல்லாயால் கூர்எரி மாலைக் குறி. |
32 |
மேகங்கள் கூடிய வானத்தின் நின்று நெருங்கிய தீப்பொறிகள் சிந்த எழுகின்ற மனமே மிகுந்த தீப்போல வரும் மாலையைக் குறிப்பாய் ஆசை.
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
தளையவிழ்தே .......... ............. ............... ............... .............. ................... .............. உளையார் கலிநன் மாப்பூட்டி வருவார் களையாரோ நீயுற்ற நோய். |
33 |
கட்ட விழ்ந்த பிடரிமயிர் தழைத்த நல்ல பரிகளைப் பூட்டித் தேரில் வரும் தலைவர் நீ யடைந்த காதல் நோயை நீக்காரோ? நீக்குவர் (வருந்தாதே என்றாள்)
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
முல்லை எயிறுஈன ............ ............ ............. ............. ...........ன மல்கிக் கடல்முகந்து கார்பொழியக் காதலர் வந்தார் உடனியைந்த கெ............. ......................... |
34 |
முல்லைக்கொடிகள் மாதர் பற்களைப் போன்ற அரும்புகள் காட்ட நிறைந்து மேகங்கள் கடலின் நீரை முகந்து பொழிய நம் காதலர் வந்தனர் நம் முடன் இசைந்த.
தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என
வற்புறுத்தி ஆற்றுவித்தல்.
.............. ............... ................
.............. ............... .............. ரடைப் பால்வாய் இடையர் தெரிவிலர் தீங்குழல் ஊதும் பொழுதால் அரித ............ ............... |
35 |
பால் மணம் நீங்காத வாயையுடைய ஆயச்சிறார் பண்ணும் திறமும் அறியாராய் இனிமையான வேய்ங் குழலூதும் மாலைக்காலம். அருமையானது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, வருவார், தலைவர், காட்டி, ஆற்றுவித்தல், பருவம், தோழி, வற்புறுத்தி, இலக்கியங்கள், மேகங்கள், பதினெண், கீழ்க்கணக்கு, கைந்நிலை, வரும், காதலர், வந்து, வானம், சங்க