கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று
அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும் முறிகிளர் நன்மலை நாடன் வருமே அரிதுரைத்திவ் இல்லில் நமக்கு. |
11 |
பன்றிகளானவை கொம்புகளாற் குத்தியெழுப்பிய நிறைந்த புழுதியில் புள்ளிகள் விளங்கிய மயில்கள் விரும்பிப் படிந்து விளையாடும் இயல்புடைய இலைமரங்கள் விளங்கும் நல்ல மலை நாட்டையுடையவனாகிய தலைவன் இம்மனையின்கண் நமக்கு அருமையாகச் சில சொற்கள் பேசி வருவான். (அவ்வரவு எனக்கு மிகவும் அச்சத்தை விளைக்கின்றது என்றாள்.)
தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று
அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக் கேசம் அணிந்த கிளர்எழிலோன் ஆகம் முடியுங் கொல் என்றுமுனிவான் ஒருவன் வடிவேல்கை ஏந்தி வரும். |
12 |
புன்னையின் நல்ல மலரையும் அன்றலர்ந்த வேங்கைப் பூவினையும் கலந்து கூந்தலிற் புனைந்து விளங்கிய வனப்புடையோளாகிய நம் தலைவியின் உடலானது அழிந்து விடுமோ என்று ஐயங்கொண்டு நம் தலைவனாகிய ஒப்பற்றவன் தன் உயிர் வாழ்க்கையை வெறுத்துக் கூர்மையான வேலைக் கையிற்றாங்கி இரவில் வருவான். (ஆதலால் இவ்வரவையானஞ்சுகின்றேன் விலக்கு என்றாள்).
2. பாலை
வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி
தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை
கூறல்.
கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும் நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டே வடுவிடை மெல்கின கண். |
13 |
விரைந்து வழியில் வருவோரை அடித்துப் பொருள் பறிக்கின்ற பரற்கற்கள் சூழ்ந்த கரும்பாறைகளில் இருந்து ஓடும் அத்தம் - அம்பேவுகின்ற விற் பிடித்த வேடர்களுடைய சீழ்க்கையடிக்குங் குரலைக் கேட்டு நீண்ட மரையான் ஏறுகள் அஞ்சியோடு கின்ற பாலை வனத்தின் வழி நீ செல்லக்கருது கின்றாய் என்பது நான் சொல்லக் கேட்டவுடனே மாவடுப்போன்ற கண்களிடையே கண்ணீர் மெதுவாக வழிந்தன. (ஆதலால் நீ பிரிந்து செல்லல் தகவன்று என்று குறிப்பிற் கூறினள்.)
வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி
தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை
கூறல்.
கதநாய் துரப்ப....................... ............................................அவிழும் புதல்மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லா முதன் .................... |
14 |
சினம் பொருந்திய நாய்கள் தொடர்ந்து செலுத்த விரிகின்ற புதர்கள் மாறுபடுகின்ற கொடிய சுரத்தின் வழியாக நீ பிரிந்து செல்வதை நான் கூற நில்லாமற் கழல்கின்றன. (வளை)
சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்.
........................................... ........................................... கடுங்கதிர் வெங்கானம் பல்லாருட்கண் சென்றார் கொடுங்கல் மலை..... |
15 |
கடுங்கதிர் வெங்கானம் கொடிய சூரியன் கிரணங்களால் மிகவும் வெப்பமடையும் காட்டின் வழியாக மிகுதியாகப் பொருளீட்டி வருதற் பொருட்டுப் பிரிந்து சென்ற நங்காதலர் வளைந்த கற்பாறைகளையுடைய மலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், வெங்கானம், தலைவியின், கைந்நிலை, பிரிந்து, பதினெண், கீழ்க்கணக்கு, தலைவனுக்குத், தோழி, பிரிவுணர்த்தப்பட்ட, பிரிவாற்றாமை, வரைபொருள், கூறல், கொடிய, வழியாக, கடுங்கதிர், பாலை, அத்தம், நான், சென்ற, வேங்கைப், அஞ்சித், தோழிக்குக், ஏதமுடைத்து, இரவுக்குறி, சங்க, தலைமகள், கூறுதல், நமக்கு, மிகவும், என்றாள், வருவான், நல்ல, விளங்கிய, ஆதலால்