ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார் மடநடை மஞ்ஞை அகவக் - கடல்முகந்து மின்னோடு வந்த(து) எழில்வானம் வந்தென்னை என்னாதி என்பாரும் இல். |
16 |
(ப-ரை.) பெரியவாய் மெல்லியவாகிய மூங்கில்போன்றிருந்த தோளினையுடையாய் ! நம்மைத் துறந்தார் இக்காலத்து வருகின்றிலர் ; மெல்லிய நடையினையுடைய மயில்கள் அழைக்கக் கடன் முகந்து மின்னுடனே வந்தது, எழிலினையுடைய வானம் ; ஆதலால், பின்னையும் என்னை வந்து, “நீ என் செய்யக் கடவாய் !” என்றிரங்கி ஒன்றைச் சொல்லுவாருமில்லை.
தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரி விண்ணுயர் வானத்(து) உரும்உரற்றத் - திண்ணிதின் புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும். |
17 |
(ப-ரை.) குளிர்ந்த நறுங்கோடல் துடுப்புப்போலப் பூங்குலைகளை யேந்த, கார்காலத்தை ஏன்றுகொண்டு முகில்கள் மிக்க வானத்தின்கண் உருமேறு ஒலிப்ப, திண்ணிதாக முயங்குவாரை யில்லாதார் நடுங்கும் வகை துன்பத்தைச் செய்யுமாலை கொல்வாரைப் போல வாராநின்றது.
கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத் தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅ இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித் துடிப்பது போலும் உயிர். |
18 |
(ப-ரை.) விரைந்து துளிகளை முகில்கள் இதழகத்தே சிதற, தாதினையுடைய பூங்கொத்துக்களையுடைய கொன்றைகள் எரிநிறத்தை மிகுப்ப, பரந்து கழறுவது போலும் எழில் விசும்பைக் காணுந்தோறும் வருந்தித் துடிப்பது போலாநின்றது என் உடலம்.
ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம் பீவி பரப்பி மயில்ஆலச் - சூலி விரிகுவது போலும்இக் கார்அதிர ஆவி உருகுவது போலும் எனக்கு. |
19 |
(ப-ரை.) மழைத்துளிகளைக் காதலித்தழைத்துக் காடெலாந் தோகைகளைப் பரப்பி மயிலினங்கள் ஆட, கருக்கொண்டு விரிகுவது போலும் இக்கார் முழங்க எனக்கு என் உயிர் உருகுவது போலாநின்றது.
இனத்த வருங்கலை பொங்கப் புனத்த கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி யானும் அவரும் வருந்தச் சிறுமாலை தானும் புயலும் வரும். |
20 |
(ப-ரை.) இனங்களையுடைய கலைகள் களித்து மிக, புனங்களிலுள்ள கொடிமிடைந்த முல்லை தளிர்ப்ப, இடியோடே கூட மிடைந்து, யானும் என் காதலரும் வருந்த, துன்பத்தைச் செய்யும்மாலை தானும் மழைப்பெயலும் எம்மேல் வாராநின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, போலும், இலக்கியங்கள், ஐந்தினை, கீழ்க்கணக்கு, எழுபது, பதினெண், விரிகுவது, பரப்பி, உருகுவது, தளிர்ப்ப, தானும், யானும், போலாநின்றது, முல்லை, எனக்கு, சிதற, வானம், எழில்வானம், சங்க, சிறுமாலை, வரும், துடிப்பது, துன்பத்தைச், முகில்கள், உயிர்