ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல் மரையான் குழவி குளம்பில் துகைக்கும் வரையக நாட! வரையால் வரின்எம் நிரைதொடி வாழ்தல் இவள். |
11 |
(ப-ரை.) தேறலைப் பிறர்கொள்ள வீழ்ந்த தீந்தேன் இறால்களை மரையான்கன்று குளம்பால் உழக்கும் வரையக நாடனே ! நீ வரையாது வருவாயாயின், எங்கள் நிரைதொடி உயிர்வாழாள்.
வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும் நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையே ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும் ஈர வலித்தான் மறி. |
12 |
(ப-ரை.) நீண்ட கதிரினையுடைய பசுந்தினையை வளைவாய்க் கிளியினம் கவரும் நீரானே தெளிந்து திகழாநின்ற சோலைகளையுடைய மலைநாடன் கேண்மையைக் காதலினாலே நிரம்ப மேவினேன் ; பிரிதலாற்றேனாயினேன் ; அவ்வாற்றாமை தெய்வத்தினாயது என்று முருகற்கு மறியையறுக்கத் துணிந்தான் வேலோன் ; தோழி ! இதனை விலக்குவாயாக.
இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில் குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும் வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை அலையும் அலைபோயிற்(று) இன்று. |
13 |
(ப-ரை.) இலை பயின்ற தண்குளவிக் கொடிகள் படர்ந்து மூடிய பொதும்பின்கட் பூங்கொத்தையுடைய காந்தளில் இனவண்டுகள் ஒலிக்கும் வரையகநாடனும் வரைவொடு வந்தான்; ஆதலான், இன்று நமக்கு அன்னை யலைக்கும் அலையும் போயிற்று.
கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்து வானின் அருவி ததும்பக் கவினிய நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும் வாடல் மறந்தன தோள். |
14 |
(ப-ரை.) கொல்லைப்புனத்த அகிலைச் சுமந்து கற்களைப் பாய்ந்து மழையானுளதாய அருவி முழங்குதலான் அழகு பெற்ற நாடன் தன்னை யடைந்தார்க்கு ஈரமுடையன் என்பதனான் அவன் பிரிந்தானாயினும் வாடுதலை மறந்தன என்றோள்கள்.
2. முல்லை
செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால் பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக் காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும் நீரோ(டு) அலமரும் கண். |
15 |
(ப-ரை.) செய்ய கதிரினையுடைய செல்வன் சீற்றமடங்கிய காலத்தின்கண் பசுங்கொடியையுடைய முல்லைகள் பூத்து மணங்கமழ்தலான் வண்டுகள் ஒலிக்கக் கார்ப்பருவத்தோடு தடுமாறுகின்ற முகில்களையுடைய வானங் காணுந்தோறும் நீரோடுங்கூடத் தடுமாறாநின்றன கண்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், வரையக, ஐந்தினை, கீழ்க்கணக்கு, பதினெண், எழுபது, நாடன், மறந்தன, செல்வன், அலமரும், அருவி, முல்லை, கதிரினையுடைய, தீந்தேன், சங்க, நிரைதொடி, அன்னை, அலையும், இன்று