பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள், இருவரிடை நட்பான் புக்கால், பெரிய வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள் குறுக் கண்ணி ஆகிவிடும். |
186 |
ஒருவன் ஆராயாது மாறுபட்டுச் சினந்து எழுந்தபோரின் கண் அவ்விருவருக்கும் இடையே நட்பாக்கும்பொருட்டுப் புகுந்தால் தன் சொற்களைக் கேளாது மிக்கவெறுப்பினால் மீண்டும் போர் தொடுக்கும் உள்ளத்தராயின் எருதின் தலையிலுள்ள குறிய கயிற்றைப்போல் திருத்த முடியாதாம்.
கருத்து: தன்சொல் கேளாதவரைத் திருத்தப் புகலாகாது.
எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின், தினைத் துணையேயானும் அணிக் கோடல் நன்றே இனக் கலை தேன் கிழிக்கும் ஏகல் சூழ்வெற்ப! பனைப் பதித்து, உண்ணார் பழம். |
187 |
இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே எனைப் பலவேயாயினும் - எத்துணைப் பலவேயாயினும் சேய்த்தாற் பெறலின் நெடுநாட்களுக்குப்பின் பெறுதலைவிட தினையளவிற்றாயினும் அணித்த நாட்களுக்குள் பெறுதல் நல்லது பனம்பழத்தை நட்டுவைத்துப் பனை பழுத்தால் அப்பழத்தை உண்போம் என்றிருப்பார் யாருமில்லையாதலான்.
கருத்து: பயன் சிறியதேயாயினும் அணித்தே வருவதைக் கொள்க.
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார், கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்; சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க! இனம் கழு ஏற்றினார் இல். |
188 |
(ஒரு காரியத்தைச் செய்ய) மனம் விரும்பிய இடத்தும் அது வழக்கத்தில் வராவாயின் அதனைச் செய்யார் அறிவுடையோர் நூல்கள் ஆகாவென் றுரைத்தனவற்றை உறுதிகொண்டு அவற்றைக் காத்தல் வேண்டும். நூல்கள் ஆகாவென உரைத்தனவும் மக்களால் விரும்பப்படுவனவாயின் அவற்றைச் செய்தல் வேண்டும். இனங் கழுவு ஏற்றினார் இல் - நூல்களோடு மாறுபட்டுக் கூறுகின்றனர் என்று மக்களைக்கழுவின்கண் ஏற்றினார் உல்கத்தில் இல்லை ஆதலான்.
கருத்து:உலகநடையினை யறிந்து அதற்கொப்ப ஒழுகுக.
கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து, நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தோடு பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே- நீர் குறிதாகப் புகல். |
189 |
நீர் சுருங்கி இறங்கிப் போகலாம் படி அளவுபட்டிருக்க அந்நெறியில் இறங்கிப் போதலை ஒழித்து தலை மிகவும் கிழிபட்டு கால்களும் வலி இழந்து நடத்தலைச் செய்யா வென்றும் சொல்லப்பட்டு முடம் என்ற பெயரோடு வேறு பெயர்களையும் அடைதலால் (அத்தகைய நெறியின்கண்) அறிவுடையார் செல்லுதலிலர்.
கருத்து: தம்உயிர்க்கு ஏதம்பட வருவனசெய்யாதொழிக.
சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார், பெரிது ஆய கூழும் பெறுவர்;-அரிது ஆம் இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால், கிடப்புழியும் பெற்றுவிடும். |
190 |
பெறுதற்கரிய ஒருவன் இருக்க இடம் பெற்றால் படுத்தற்குரிய இடத்தையும் பெற்றுவிடுவான்; (அதுபோல) செல்வரை அடைந்தவர்கள் முன்னர்ச் சிறிய அளவிற்றாய கூழினைப் பெற்று பின்னர் மிகுந்தஅளவிற்றாய உணவினையும் பெறுவர்.
கருத்து: தக்கவர்களைச் சார்ந்தொழுகின் மிகுந்த பயனைஅடையலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், ஒருவன், கீழ்க்கணக்கு, பழமொழி, நானூறு, வேண்டும், ஏற்றினார், பதினெண், நூல்கள், இழந்து, நீர், பெறுவர், பெற்றால், பெற்று, இறங்கிப், தேன், எனைப், சங்க, பெறலின், கிழிக்கும், மனம், பலவேயாயினும், செய்யார்