களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து, மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே- பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன் கூடாரை அட்ட களத்து. |
41 |
அருவி பாயும் நீர் நாடன் இடி முரசு போன்று கொடியவர்களை வென்ற போர்க்களத்தில், வேல்களால் மார்பில் குத்தப்பட்டுத் தளர்ந்துபோன யானைகள் கலக்கம் அடைந்து ஒரு பக்கக் காதுகள் நிலத்தில் படும்படியாகச் சாய்ந்தன. அக்காட்சி, நிலமகள் கூறும் அறக்கருத்துகளை யானைகள் பணிவோடு கேட்கும் நிலைபோல் தோன்றியது.
மிகைப் பாடல்
படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக் குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த திங்களில் தோன்றும் முயல்போலும் - செம்பியன் செங் கண் சிவந்த களத்து. |
பாண்டியன் கண்கள் சிவந்தது போன்று சிவந்த போர்க்களத்தில், போருக்கு உரிய மாலைகளை அணிந்து போரிட்டு மாண்ட மன்னர்களின் பருத்த குடல்களைத் தின்ற நரிகள், வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகளின் அருகே தூங்குவது முழு நிலாவிற்கு அருகில் உள்ள முயல் வடிவக் களங்கம் போன்று இருந்தது.
களவழி நாற்பது முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், களவழி, நாற்பது, போன்று, கீழ்க்கணக்கு, பதினெண், போர்க்களத்தில், சிவந்த, யானைகள், கூறும், சங்க, நீர், நாடன், களத்து