களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
பரும இன மாக் கடவி, தெரி மறவர் ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும் வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன் வேந்தரை அட்ட களத்து. |
16 |
சோழன் பகை மன்னர்களை வென்ற களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்ரனர். வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி, தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே- போர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து. |
17 |
போர்க் கொடி நாட்டி சோழன் ஆர்த்துப் போரிட்ட களத்தில், வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டதால் உடல்களில் ஏற்பட்ட புண்களில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அக்காட்சி கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம் கூட்டமாக ஏற்றப் பெற்ற தீபங்களைப் போலத் தெரிந்தது.
நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும் விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் - தெளிந்து தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய் உடற்றியார் அட்ட களத்து. |
18 |
போர்க்களத்தில் வீரர்களின் பிணங்களை, அங்கே பொங்கி வழியும் இரத்த வெள்ளமானது இழுத்துச் செல்லும். அக்காட்சி, கடற்கரை ஓரத்தில் கட்டுமரங்களை அலைகள் இழுத்துச் செல்வது போல் தோன்றியது.
இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி, கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து, முக் கோட்ட போன்ற, களிறு எல்லாம் - நீர் நாடன் புக்கு அமர் அட்ட களத்து. |
19 |
வீரர்கள் எறிந்த வேலானது யானையின் இரு தந்தங்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கடைப்பகுதி மட்டும் வெளியே தோன்றியது. அக்காட்சி மூன்று தந்தங்களை உடையது போன்று யானைகள் நின்றது போலிருந்தது.
இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச் சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற - புனல் நாடன் நேராரை அட்ட களத்து. |
20 |
கழுகுகள் போர்க்களத்தில் ஈர்க்குகளைப் போன்ற இறகுகளைப் பரவவிட்டும், குனிந்தும் பிணங்களை இரத்தத்தோடு சுவைக்கின்றன. அக்காட்சி அதிர்வு இல்லாத மென்மையான ஓசையைத் தரும் மத்தளத்தைத் தட்டி இசையை உண்டாக்குவது போல் இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, களத்து, அட்ட, நாடன், போல், இலக்கியங்கள், அக்காட்சி, வீரர்கள், களவழி, குருதி, பதினெண், நாற்பது, புனல், கீழ்க்கணக்கு, எறிந்த, பிணம், அதிர்வு, ஈர்க்கும், தோன்றியது, இழுத்துச், பிணங்களை, போர்க்களத்தில், அமர், வீரர்களின், சோழன், பாய்வன, ஆர்ப்பு, சங்க, களத்தில், ஆரவார, போர்க், மீது, யானைகள், நீர்