சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்; அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மை அறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;- மறத்தேயும் பொய் உரைக்கும் வாய். |
(311) |
-----
சிறப்புப் பாயிரம்
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன், மா நிலத்துப் பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால், கல்லா, மறு பஞ்சம் தீர் மழைக்கை மாக் காரியாசான், சிறுபஞ்சமூலம் செய்தான். |
1 |
மற்போர் விரும்பும் தோள் வலிமையையுடைய, மாக்காயன் என்பவர் மாணாக்கராகிய, வற்கடத்தைத் தீரக்கின்ற மழையைப் போலும் ஈகை யொழ்க்கமுடைய, சிறந்த, காரியாசான் என்பவர், இப்பேருலகத்தில், மக்கள் பலருடைய அறியாமை நோயை நீக்குந் தகைமையால், அறிவுநூல்களை (அவர்கள்) கல்லாத, குற்றந்தீரும்படி, சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை, இயற்றினாரென்க.
கருத்துரை: மாக்காயனார் மாணாக்கராகிய காரியாசான் என்னுஞ் சான்றோர் மக்கள் அறியாமையுங் குற்றமும் நீங்கும்படி ‘சிறுபஞ்சமூலம்‘ என்னும் இந்நூலை யியற்றினார் என்பது.
ஒத்த ஒழுக்கம், கொலை, பொய், புலால், களவோடு. ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு, ஒத்த உறு பஞ்ச மூலம் தீர் மாரிபோல் கூறீர்- சிறுபஞ்சமூலம் சிறந்து! |
2 |
----
சிறுபஞ்சமூலம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, சிறுபஞ்சமூலம், இலக்கியங்கள், காரியாசான், ஒத்த, கீழ்க்கணக்கு, பதினெண், மாணாக்கராகிய, இந்நூலை, என்பவர், என்னும், மக்கள், மாக்காயன், சங்க, நீக்கும், பொய், தோள், தீர்