சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
சத்தம், மெய்ஞ் ஞானம், தருக்கம், சமையமே, வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு, ஆங்கு, அத் தகத் தந்த இவ் ஜந்தும் அறிவான், தலையாய, சிந்திப்பின் சிட்டன் சிறந்து. |
91 |
வழக்கு நூலும், சொன்முடிபு நூலும், தருக்க நூலும் சமயநூலும், அறிவின் மிக்கார் கண்ட வீட்டு நெறியும் இவ்வைந்தும் அழகாக அறிவான் தலையாய சிட்டானாவான் சிறந்து.
கருத்துரை: இலக்கண நூல் முதலானவற்றை நன்கறிந்தவனே மக்களுட் சிறந்தவனாவான்.
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே, யாழினோடு, எண்ணுங்கால் சாந்தே, எழுதல், இலை நறுக்கு, இட்ட இவ் ஐந்தும் அறிவான்-இடையாய சிட்டன் என்று எண்ணப்படும். |
92 |
கருதுங்காற் கருதப்படு மெண்ணும், யாழ்வல்லனாதலும் சந்தனமரைத்தலும் எண்ணலும் பொழில்பட இலை நறுக்கலும் என இவ்வைந்து காரியமும் அறிந்து வல்லனாவான் இடையாய சிட்டனென் றெண்ணப்படும்.
கருத்துரை: கணித நூல் முதலிய ஐந்தனையும் கற்று வல்லவன் இடையாய சிட்டனென்று சொல்லப்படுவா னென்பதாம்.
நாண் இலன் நாய்; நன்கு நள்ளாதான் நாய்; பெரியார்ப் பேண் இலன் நாய்; பிறர் சேவகன் நாய்; ஏண் இல் பொருந்திய பூண் முலையார் சேரி, கைத்து இல்லான், பருத்தி பகர்வுழி நாய். |
93 |
நாணமில்லாதானு நாயோடொக்கும், பிறரொடு நண்பு கொள்ளாதானு நாயோடொக்கும், பெரியாரைப் பேணாதானு நாயோடொக்கும். பிறர்க்குச் சேவகனாய்த் திரிவானு நாயோடொக்கும்; மனத்தின்க ணிலையில்லாத பூணையுடைய முலையார் சேரியின்கட் கைப்பொருளில்லாத காதலாற் சென்று திரிவானும் பருத்தி விற்குமிடத்துச் சென்று நிற்கு நாயோடொக்கும்.
கருத்துரை: நாணமில்லாதவன் முதலியோர் நாய்க்கு ஒப்பாவார்கள்.
நாண் எளிது, பெண்ணேல்; நகை எளிது, நட்டானேல்; ஏண் எளிது, சேவகனேல்; பெரியார்ப் பேண் எளிது;- கொம்பு மறைக்கும் இடாஅய்!-அவிழின்மீது அம்பு பறத்தல் அரிது. |
94 |
ஒருத்தி பெண்குணத்தையுடையளாயில் அவளுக்கு நாணெளிது, ஒருவனோடொருவன் நட்டானாயிர் அவற்கு மகிழ்ந்து நகுதல் எளிது, ஒருவன் சேவகனாயின் அவனுக்கு வலிசெய்தல் எளிது, குணத்தாறை பெரியராயின் அவர்க்குப் பிறரைப் பேணுதல் எளிது, வஞ்சிக்கொம்பை மறைக்கும் இடையினையுடையாய்! பலர்க்குஞ் சோறிடுவார்மேற் பிறர் அம்பு பறந்து சேறல் அரிது.
கருத்துரை: பெண்டிற்கு நாணும், நட்டார்க்குச் சிரிப்பும் சேவகர்க்கு வலிமையும், பெரியார்க்குப் பிறரைப் பேணுதலும் எளிது, ஆனால் அன்புடையார்க்குச் சினம் தீது செய்தல் அருமையாகும்.
இன் சொல்லான் ஆகும், கிளைமை; இயல்பு இல்லா வன் சொல்லான் ஆகும், பகைமை மன்; மென் சொல்லான் ஆய்வு இல்லா ஆர் அருளாம்; அவ் அருள் நல் மனத்தான்; வீவு இல்லா வீடு ஆய் விடும். |
95 |
ஒருவன் சொல்லும் உறுதியாகிய சொல்லினாறை சுற்ற முளதாகும், குணமில்லாத கடுஞ்சொற்களாற் பகைகளுளவாம், பிறர்க்குச் சொல்லு மெல்லிய சொல்லினாற் றளல்வில்லாத அருள் உளதாம், அவ்வருளாவ தொருவன் மன நன்மையால் கேடில்லாத வீடாய் விடும்.
கருத்துரை: இனசொல்லாற் கிளைமையும், வன் சொல்லாற் பன்மையும், மென்சொல்லாற் பெருமையும் இரக்கமும், அவ்விரக்க மனத்தால் வீடும் ஒருவனுக்கு உண்டாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, எளிது, நாயோடொக்கும், கருத்துரை, நாய், இலக்கியங்கள், சிறுபஞ்சமூலம், இடையாய, சொல்லான், நூலும், கீழ்க்கணக்கு, பதினெண், இல்லா, அறிவான், பிறர்க்குச், மறைக்கும், விடும், சென்று, அரிது, பிறரைப், ஒருவன், அருள், ஆகும், அம்பு, பெரியார்ப், தலையாய, சிட்டன், வீடு, கண்ட, சங்க, சிறந்து, நூல், பிறர், முலையார், பேண், இலன், நாண், பருத்தி