சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

காடுபோல் கட்கு இனிய இல்லம், பிறர் பொருள் ஓடுபோல், தாரம் பிறந்த தாய், ஊடு போய்க் கோத்து இன்னா சொல்லானாய், கொல்லானேல், - பல்லவர் ஓத்தினால் என்ன குறை? |
81 |
பிறருடைய கண்ணுக் கினிய வில்லத்தைக் காடுபோலக் கொண்டு விரும்பாது, பிறருடைய பொருளை ஓதுபோலக் கொண்டு விரும்பாது, பிறர் மனையாளைத் தான் பிறந்த தாயாக்ககொண்டு விரும்பாது, பிறரூடு போய்க் கோத்தின்னாதனவற்றைச் சொல்லாது, ஓருயிரையுங் கொல்லானாயினல்லார் பலருஞ் சல்லிய நூல்களாற் காரிய மென்னை யவற்கு?
கருத்துரை: ஒருவன் பிறரதி அழகிய இல்லத்தைக் காதுபோலவும், பிறர் பொருளை ஓடுபோலவும், பிறன் மனையாளைத் தன் தாயாகவும் கருதி விரும்பாமல், பிறரைப் பழித்துரையாமல், ஓருயிரையுங் கொல்லாதிருப்பானாயின், அவனுக்குப் பெரியோர் சொல்லிய நூல்களால் அறிய வேண்டிய குறை என்ன உண்டு என்பது.
தோற் கன்று காட்டிக் கறவார்; கறந்த பால் பாற்பட்டார் உண்ணார்; பழி, பாவம், பாற்பட்டார், ஏற்று அயரா, இன்புற்று வாழ்வன, ஈடு அழியக் கூற்று அயரச் செய்யார், கொணர்ந்து. |
82 |
தோற்கன்று காட்டிப் பசுவைக் கறவார், அப்பெற்றியாப் கறந்த பாலை நெறிப்பட்டா ருண்ணார், பழியையும் பாவத்தையும் தம்மே மேலேற்றுக்கொண்டு விரும்பாதே தன் கிளையோடின்புற்று வாழுமுயிர்களைக் கூற்று விரும்பக்கொணர்ந்து கொலை செய்யார்.
கருத்துரை: நன்னெறிப் பட்டவர் தோற்கன்று காட்டிப் பசுவினுபாலைக் கறத்தல் முதலிய தீச்செயல்களைச் செய்யார் என்பதாம்.
நகையொடு, மந்திரம், நட்டார்க்கு வாரம், பகையொடு, பாட்டு உரை, என்று ஐந்தும் தொகையொடு மூத்தார் இருந்துழி வேண்டார், முது நூலுள் யாத்தார், அறிவினர் ஆய்ந்து. |
83 |
சிரித்தலும், ஒருவனோடு செவிச்சொல்லும், தம்முற்றார்க்காக வாரம் சொல்லுதலும், பகையாடுதலும், பாட்டுக்குப் பொருட் சொல்லுதலும் இவ்வைந்துங் கூட்டத்தோ டறிவுடையரா யிருந்துழி வேண்டாராய்ப் பழைய நூல்களிலே யாத்து வைத்தார் அறிவுடையார் ஆய்ந்து.
கருத்துரை: பெரியோர் கூடியிருக்கு மிடத்தில் சிரித்தல் இரகசியப் பேச்சுப் பேசுதல், நட்பினர்க்குப் பாரபக்கமாக நலம் பேசுதல், ஆகாதவர்க்குப் பகைமை பேசுதல், காட்டுக்கு உரை சொல்லுதல் ஆகிய ஐந்து செயல்களையும் அறிவுடையோர் செய்யமாட்டார்கள்.
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது எய்தா உரையை அறிவானேல், நொய்தா அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர்; வாயுள் தறி எறியார், தக்காரேதாம். |
84 |
-----
...................................................... ...................................................... ...................................................... ...................................................... |
85 |
பாடல் கிடைக்கவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், கருத்துரை, சிறுபஞ்சமூலம், செய்யார், விரும்பாது, பிறர், கீழ்க்கணக்கு, பதினெண், பேசுதல், கூற்று, பாற்பட்டார், கறந்த, வாரம், சொல்லுதலும், ஆய்ந்து, கறவார், காட்டிப், தோற்கன்று, மனையாளைத், என்ன, போய்க், பிறந்த, சங்க, குறை, பிறருடைய, ஒருவன், ஓருயிரையுங், பொருளை, கொண்டு, பெரியோர்