சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி, பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், - இவர் செம்மை செத்தால் அறிக, சிறந்து! |
101 |
பத்தினியும், சேவகனும், குற்ற மில்லாத கடுந்தவசியும், பொருட்டிறத்தின்கட் பொத்தின்றிச் செவ்வியனாய்த் தேறப்படுவானும், முதன்மையாக அரசனாலே வைக்கப்பட்டார் பொத்தின்றி வழக்கும் சான்றவனுமென இவ்வைவர் செம்மையும் இவர் செத்தாலறிக மிகவும்.
கருத்துரை: பத்தினி சேவகன் முதலியோருடைய செம்மமைக் குணங்கள், அவறிறந்தபின் மிகவும் உலகத்தாரால் அறியப்படும்.
வழிப் படர், வாய்ப்ப வருந்தாமை, வாய் அல் குழிப் படல், தீச் சொற்களோடு, மொழிப்பட்ட காய்ந்து விடுதல், - களைந்து, உய்யக் கற்றவர், ஆய்ந்து விடுதல் அறம். |
102 |
பிறர்வழிச் செலவும், வாய்க்குங் காரியங்களை முயன்று வருந்தாமை, மெய்ம்மையல்லா நெறியின்கட் சேறல், பிறரைப் பழிகூறுஞ் சொற்கள், நல்லாராற் சொல்லப்பட்ட குணங் களைந்து நீக்குதலென இவ்வைந்தையுங் கற்றறிவர் களைந்து நீக்குதலறமாவது.
கருத்துரை: நல்வாழ்வடைய விரும்புகின்றவர்கள் தீச்சொற்கள் கூறுதலும், வழிப்பறிக் கொள்ளை செய்தலும், பிறர் பொருள் கவரலும், மெய்ம்மை தவறுதலும், அறிவுரைகளைக் கடத்தலும் ஆகா.
புறத்திரட்டில் கண்ட பாடல்கள்
அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு, கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால் - மெச்சிய தோகை மயில் அன்ன சாயலாய்! - தூற்றுங்கால் ஈகை வகையின் இயல்பு. |
(206) |
---
கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை, பொய்ம் மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறு அருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,- பொருள் கோடி எய்தல், புகன்று. |
(207) |
---
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், களைந்து, பொருள், கீழ்க்கணக்கு, பதினெண், சிறுபஞ்சமூலம், விடுதல், பயம், மாறு, வருந்தாமை, அருள், நன்மை, இவர், பத்தினி, சங்க, சேவகன், பொத்து, மிகவும், கருத்துரை