சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

தக்கது, இளையான் தவம்; செல்வன் ஊண் மறுத்தல் தக்கது; கற்புடையாள் வனப்புத் தக்கது; அழல், தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின், நிழற்கண் முயிறு, ஆய்விடும். |
96 |
இளையான் பிறந்து தவஞ்செய்தல் தக்கது, செல்வத்தையுடையான் இல்லறத்தின்கணின்று இடையீட்டை யூண் மறுத்து நோன்பு புரிதல் தக்கது, கற்புடையாக் வனப்பு தக்கது, ஒருவன் மனுயாக் அறிவிலளாழொழுகின் நிழலின்கண் முயிறோடழலை யொக்கும்.
கருத்துரை: இளையான் தவமும், செல்வன் நோன்பும், அழகுடையாக் கற்பும் தக்கவை. அன்பும், இன்பும் உணர்தற்குரிய இல்லாள் அறிவிலளாயின் அழலையும் மரநிழற்கண்ணுள்ள செவ்வெறும்பையும் ஒப்பாவள்.
'பொய்யான் சுவர்க்கம்; வாயான் நிரையம்; பொருள்தான், மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது'-மெய் அன்றால்;- மைத் தக நீண்ட மலர்க் கண்ணாய்! - தீது அன்றே எத் தவமானும் படல். |
97 |
பொய்ந்நெறி யொழுகினால் அவர்க்குச் சுவர்க்கமுளதாம், மெய்ந்நெறியி லொழுகினால் அவர்க்கு நிரயமுளதாம், பொருள் தேடுதலினிதாம், குற்ற மிக்க மடந்தையரோடு கூடி இல்வாழும் இல்வாழ்க்கையினிதா மென்றல் மெய்ம்மையுமன்றால், மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய்! யாதேனு மொரு தவம் படுதல் தீதன்று நன்மையேயாம்.
கருத்துரை: பொய்யாற் சுவர்க்கம் பெறுதலும், மெய்யால் நரகமடைதலும், நிலையற்ற செல்வப் பொருளால் இனிது வாழ்தலும், குற்றம் பொருந்திய பெண் சேர்க்கையால் இனிது வாழ்தலும் மெய்யன்று, ஒருவரிடத்தே எந்தத் தவமேனும் உண்டாதல் தீதன்று என்பதாம்.
புல் அறத்தின் நன்று, மனை வாழ்க்கை; போற்று உடைத்தேல், நல்லறத்தாரோடும் நட்கலாம்; நல்லறத்தார்க்கு அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்ந்தார்களே, இம்மையில் அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்வார். |
98 |
புல்லிய திறவறத்துன்ன்று மனைவாழக்கை, மனையறத்திற்குச் சொன்னபடியே யொழுகிற்றுறவறத்தாரோடு நடக்கலாம், ஆதலால் நல்ல துறவறத்தார்க்குத் தாம் ஆக்கியிட்டு, தாமும் இடப்படாதுணவர்கள் இப்பிறப்பின்கண் மிகவிட்டுண் டில்வாழ்க்கை வாழ்வார்.
கருத்துரை: மக்கள் ஓல்லறவாழ்விலு நூன்று யாவர்க்கும் பயன்படுமாறு வாழ்தல் நன்றாம்.
ஈவது நன்று; தீது, ஈயாமை; நல்லவர் மேவது நன்று, மேவாதாரோடு; ஓவாது, கேட்டுத் தலைநிற்க; கேடு இல் உயர் கதிக்கே ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து. |
99 |
பிறர்க்கொன்றை யீவது நன்று; பிறர்க்கீயாமை தீது, மேவாதாரோடு நல்லராயிருப்பார் மேவியொழுகுவதுவே நன்று, நன்னெறிக்கு வழியாகிய நூலினையே கேட்டதன் கண்ணே நிற்க; கேடிலாத உயர்கதியாகிய வீட்டுநெறியின்கண்ணே செல்லும் செலவினு கண்நிற்க மேற்கொண்டு.
கருத்துரை: ஈகை நன்று, ஈயாமை தீது, தம்மைச் சேராதவரோடும் நல்லவர்கள் ஒருவாறு சேர்ந்தாற்போலிருப்பது நன்று, நல்லனகேட்டு அவற்றுக்குத் தக ஒழுகுதல் அவ்வொழுக்கம் மேன்மேல் உயர்ந்து நற்பேற்றிப்கு மக்களைச் சேர்ப்பியாநிற்கும்.
உண் இடத்தும், ஒன்னார் மெலிவு இடத்தும், மந்திரம் கொண்டு எண் இடத்தும், செல்லாமைதான் தலையே; எண்ணி, உரைப் பூசல் போற்றல், உறு தவமேல் கங்கைக் கரைப் பூசை போறல், கடை. |
100 |
பிறருண்ணுமிடத்தும் பகைவராயினார் தளர்ந்தவிடத்தும் பிறர் சூழ்ச்சிகொள்ளுமிடத்துஞ் சொல்லாமையும், தாமொருவர்க்குத் தலைமையாகிய குணம் ஆராய்ந்து பிறரோடு மாறுபட்டுச் சொல்லுஞ் சொல்லின்றித் தமக்குளதாகப் பாதுகாத்தலைச் செய்தலும், மிக்க வறத்தை மேற்கொண்ட காலத்துப் பிறவுரைக் கொன்று தின்கையும், காரணமாய்ந்தாற் றவவேடங்கொண்ட பூசையொத்தலாகிய கீழ்மையாம்.
கருத்துரை: பிறர் உண்ணுமிடத்திலும், பகைவர்கள் தளர்ச்சியுடையவரா யிருக்குமிடத்திலும், மறைமொழிகள் கூறி ஏதோ ஆழ்ந்து நினைத்துக் கொண்டிருக்கு மிடத்திலும் செல்லலாகாது. ஆன்றோர் அறிவுரைகளுக்கு மாறுபடுதலும், உயிர்க்கொலை புரிதலும், உள்ளொன்று னவத்து மேலே தவக்கோலம் பூண்டிருத்தலுந்தீதாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, நன்று, தக்கது, கருத்துரை, இலக்கியங்கள், தீது, சிறுபஞ்சமூலம், பதினெண், கீழ்க்கணக்கு, இனிது, இடத்தும், இளையான், ஆற்ற, உண்டு, வாழ்வார், பிறர், மேவாதாரோடு, இட்டு, ஈயாமை, தீதன்று, சுவர்க்கம், செல்வன், தவம், நீண்ட, மிக்க, வாழ்தலும், சங்க, அட்டு