பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

'கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்' என்பார் மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;- மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!- கடம் பெற்றான் பெற்றான் குடம். |
211 |
மடப்பம் பொருந்திய மான்போன்ற பார்வையையுடைய சிறந்த மயில் போல்வாய்! மெய்யான நெறியிலே நின்று உலக இயலை அறிந்தார் உண்மையாகவே கைவிட்ட ஒண் பொருள் யாதொரு கரியுமின்றிக் கடனாகத் தன் கையினின்றும் விட்ட ஒள்ளிய பொருள் மீட்டுத் தன் கையின்கண் வருதல் இல்லை என்று கூறுவார்கள் பிறர்க்குக் கடனாகக் கொடுத்த பொருளை மீட்டுப் பெற்றானெனப் படுவான் உறுதி கூறுதற்குப் பாம்புக் குடத்தைப் பெற்றவனேயாவா னாதலால்.
கருத்து:யாதொரு சான்றுமின்றிக் கடன் கொடுத்தலாகாது.
கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார் இடம் கொண்டு, 'தம்மினே' என்றால், தொடங்கிப் பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல், நகை மேலும் கைப்பாய் விடும். |
212 |
தாம் கடனாகக்கொண்ட ஒள்ளிய பொருளை பிறரிடம் தம் கையினின்றும் விட்டிருப்பார் அவரிடத்திற்சென்று எம்மிடம் கொண்ட பொருளைத் தரவேண்டுமென்று கேட்டால் தம்மோடு பகையினை மேற்கொண்டவரைப்போலத் தொடங்கி கடன் வாங்கியவர் சினத்தல் விளையாட்டாகச் செய்தவிடத்தும் மனதிற்குக் கசப்பாய்விடும்.
கருத்து: கொடுப்பதாகக் குறித்த காலத்தில் தாங்கொண்ட பொருளைக் கொடாராயின் கடன்கொண்ட ஒண்பொருளை உடையார்க்கு மனக்கசப்பை உண்டாக்கும்.
23. நன்றியில் செல்வம்
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன ஆவதே போன்று கெடும். |
213 |
ஒல்லென்று ஒலிக்கும் நீர் கற்பாறைமீது பாய்வதே போன்று விளங்கும் கடற்றுறையை உடையவனே! கேட்பாயாக தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதேபோன்று தோற்றுவித்துத் தன்னெல்லையைக்கடந்து கெட்டுப்போகும் (ஆதலால்) தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? (விரும்புதலிலர்.)
கருத்து: நல்லோர், தீயது செய்வார் செல்வ நிலையாமையை அறிந்து அதனைப் பொருளாக மதித்தலிலராகலின், தீவினை செய்து பொருளீட்டலாகாது என்பதாம்.
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார் நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர் கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு. |
214 |
இனிய ஒலியினையுடைய அருவிநீர் கற்பாறைமேல் இழியா நின்று விளங்கும் மலைநாடனே! பழைய நூல்களில் மாட்சிமைப்பட்ட துணிவு ஒரு சிறிதும் இல்லாதவர்கள் நலங்களில் மாட்சிமைப்பட்ட பொருளினை முயன்று உடையராதல் மாமரமானது காய்ப்புற்று அதனால் தன்மேல் பிறரெறியும் கல்லை ஏற்றுக்கொள்ளுதல் போலும்.
கருத்து: அறிவிலார் பெற்ற செல்வம் அவர்க்கே துன்பத்தினை விளைக்கும்.
பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார், கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!- மரம் குறைப்ப மண்ணா, மயிர். |
215 |
கன்றினை உடைய பசு வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே! மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள் பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வம் பெற்றாலும் - செல்வத்தை ஒருகாற் பெற்றாலும் வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலுமிலர் தாமுந் துய்த்தலுமிலராகி பற்றுள்ள முடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்; இஃது என்னோ என்றவாறு.
கருத்து:கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றி இறுகப்பிடித்தல் அடாத செய்கையாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, செல்வம், பொருள், செய்வார், இலக்கியங்கள், பழமொழி, நானூறு, நீர், பெற்றாலும், பதினெண், கீழ்க்கணக்கு, போலும், போன்று, விளங்கும், பாய்வதே, தன்மேல், கற்றாரும், புனல், மாட்சிமைப்பட்ட, பழைய, மாண்ட, துணிவு, தீவினை, கொண்ட, கடம், பெற்றான், மயில், கைவிட்ட, சங்க, நின்று, யாதொரு, கடன், பொருளைக், பொருளை, ஒள்ளிய, கையினின்றும், தாம்