முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவாய்மொழித் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்தது
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம் ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம். |
வெண்பாக்கள்
ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து. |
சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், பாதங்கள் யாமுடைய பற்று. |
அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், பேராத வுள்ளம் பெற. |
பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமுனுசன். மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும், ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், யாழினிசை வேதத் தியல். |
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
திருவாய் மொழி முதல் பத்து
2791 |
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. |
1.1 |
2792 |
மனனக மலமற மலர்மிசை யெழுதரும் மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன் இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும் இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. |
1.2 |
2793 |
இலனது வுடையனி தெனநினை வரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந் நலனுடை யொருவனை நணுகினம் நாமே. |
1.3 |
2794 |
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள் தாமவரிவருவர், அதுவிது வுதுவெது வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. |
1.4 |
2795 |
அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள் அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர் அவரவர் விதிவழி யடையநின் றனரே. |
1.5 |
2796 |
நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர் என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. |
1.6 |
2797 |
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. |
1.7 |
2798 |
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும் வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன் புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. |
1.8 |
2799 |
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள் உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள் உளனென விலனென விவைகுண முடைமையில் உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. |
1.9 |
2800 |
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன் பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. |
1.10 |
2801 |
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல் நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. |
1.11 |
2802 |
வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர் வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே. |
2.1 |
2803 |
மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள் என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே. |
2.2 |
2804 |
நீர்நும தென்றிவை--வேர்முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அத--னேர்நிறை யில்லே. |
2.3 |
2805 |
இல்லது முள்ளதும்--அல்ல தவனுரு எல்லையி லந்நலம்--புல்குபற் றற்றே. |
2.4 |
2806 |
அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர் செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. |
2.5 |
2807 |
பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன் பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. |
2.6 |
2808 |
அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன் அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. |
2.7 |
2809 |
உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. |
2.8 |
2810 |
ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம் விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. |
2.9 |
2811 |
எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. |
2.10 |
2812 |
சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல் சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. |
2.11 |
2813 |
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள் மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. |
3.1 |
2814 |
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய், ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம், தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன், அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. |
3.2 |
2815 |
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த, அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம், அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? |
3.3 |
2816 |
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான், யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான், பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான், பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. |
3.4 |
2817 |
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த, கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன், வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு, உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. |
3.5 |
2818 |
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை, உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள், உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை, உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. |
3.6 |
2819 |
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற, நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை, ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து, நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. |
3.7 |
2820 |
நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி, நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி, மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. |
3.8 |
2821 |
வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித் தலத்து, எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும் புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. |
3.9 |
2822 |
துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும், மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன், பு<யற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் லடிப்போது , அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. |
3.10 |
2823 |
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை, அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள், அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார் அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. |
3.11 |
2824 |
அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால் வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ? |
4.1 |
2825 |
என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய் என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே? முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே? |
4.2 |
2826 |
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள். மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று , ஒருத்தி மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. |
4.3 |
2827 |
என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல் நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ? |
4.4 |
2828 |
நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே, நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால் மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே. மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. |
4.5 |
2829 |
அருளாத நீரருளி யவராவி துவராமுன் அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே? |
4.6 |
2830 |
என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருவாய்ச்சொல் என்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே? |
4.7 |
2831 |
நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய் நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய் சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. |
4.8 |
2832 |
நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன், வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று, வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ? ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. |
4.9 |
2833 |
உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய், கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. |
4.10 |
2834 |
அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின் வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. |
4.11 |
2835 |
வளவே ழுலகின் முதலாய் வானோ ரிறையை அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா. என்பன், பின்னையும், தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய், இளவே றேழும் தழுவிய எந்தாய். என்பன் நினைந்துநைந்தே. |
5.1 |
2836 |
நினைந்து நைந்துள் கரைந்துருகி, இமையோர் பலரும் முனிவரும், புனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோ டேந்தி வணங்கினால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே, மனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே. |
5.2 |
2837 |
மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும், நீயோ னிகளைப் படை என்று நிறைநான் முகனைப் படைத்தவன் சேயோ னெல்லா அறிவுக்கும், திசைக ளெல்லாம் திருவடியால் தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே. |
5.3 |
2838 |
தானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே. |
5.4 |
2839 |
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய். மாதவா. கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய். கோவிfந்தா. வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தா.நீ யருளாய் உ ன் தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. |
5.5 |
2840 |
வினையேன் வினைதீர் மருந்தானாய். விண்ணோர் தலைவா. கேசவா. மனைசே ராயர் குலமுதலே. மாமா யன்னே. மாதவா. சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய். சிரீதரா. இனையா யினைய பெயரினாய். என்று நைவன் அடியேனே. |
5.6 |
2841 |
அடியேன் சிறிய ஞானத்தன், அறித லார்க்கு மரியானை கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை செடியார் ஆக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன், இதனில் மிக்கோர் அயர்வுண்டே? |
5.7 |
2842 |
உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க் காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே. |
5.8 |
2843 |
மாயோம் தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய்வீய தூய குழவி யாய்விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும் தாயோன் தம்மா னென்னம்மான் அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. |
5.9 |
2844 |
சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான், ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து, நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே. |
5.10 |
2845 |
மாலே. மாயப் பெருமானே. மாமா யனே. என்றென்று மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் பாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே. |
5.11 |
2846 |
பரிவதி லீசனைப் பாடி விரிவது மேவ லுறுவீர். பிரிவகை யின்றிநன் னீர்தூய் புரிவது வும்புகை பூவே. |
6.1 |
2847 |
மதுவார் தண்ணந் துழாயான் முதுவே தமுதல் வனுக்கு எதுவே தென்பணி என்னா ததுவே யாட்செய்யு மீடே. |
6.2 |
2848 |
ஈடு மெடுப்புமி லீசன் மாடு விடாதென் மனனே பாடுமென் நாவலன் பாடல் ஆடுமெ னங்கம ணங்கே. |
6.3 |
2849 |
அணங்கென ஆடுமெ னங்கம் வணங்கி வழிபடு மீசன் பிணங்கி யமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையி னானே. |
6.4 |
2850 |
கொள்கைகொ ளாமையி லாதான் எள்கலி ராகமி லாதான் விள்கைவிள் ளாமைவி ரும்பி உள்கலந் தார்க்கோ ரமுதே. |
6.5 |
2851 |
அமுதம் அமரகட் கீந்த நிமிர்சுட ராழி நெடுமால் அமுதிலு மாற்ற இனியன் நிமிர்திரை நீள்கட லானே. |
6.6 |
2852 |
நீள்கடல் சூழிலங் கைக்கோன் தோள்கள் தலைதுணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள்கள் தலைக்க ழிமினே. |
6.7 |
2853 |
கழிமின்தொண் டீர்கள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால் வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே. |
6.8 |
2854 |
தரும அரும்பய னாய திருமக ளார்தனிக் கேள்வர், பெருமை யுடைய பிரானார், இருமை வினைகடி வாரே. |
6.9 |
2855 |
கடிவார் தீய வினைகள் நொடியா ருமள வைக்கண் கொடியா அடுபுள் ளுயர்த்த வடிவார் மாதவ னாரே. |
6.10 |
2856 |
மாதவன் பால்சட கோபன் தீதவ மின்றி யுரைத்த ஏதமி லாயிரத் திப்பத்து ஓதவல் லார்பிற வாரே. |
6.11 |
2857 |
பிறவித்துயரற ஞானத்துள்நின்று, துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார், அறவனை யாழிப் படையந fதணனை, மறவியை யின்றி மனத்துவைப் பாரே. |
7.1 |
2858 |
வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத் துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன், எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து, அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே. |
7.2 |
2859 |
ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும், மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை, தூய அமுதைப் பருகிப்பருகி, என் மாயப் பிறவி மயர்வறுத் தேனே. |
7.3 |
2860 |
மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை, உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை, அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என் இசைவினையென்சொல்லி யான்விடுவேனே. |
7.4 |
2861 |
விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை, நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை, தொடுவேசெய்திள ஆய்ச்சியர்க்கண்ணினுள், விடவேசெய்து விழிக்கும்பிரானையே. |
7.5 |
2862 |
பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும் விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன், மராமரமெய்த மாயவன், என்னுள் இரானெனில்பின்னை யானொட்டுவேனோ. |
7.6 |
2863 |
யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன், தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல் வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே. |
7.7 |
2864 |
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைf நன்னெஞ்சந் தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி, பின்னை நெடும்பணைத் தோள்மகிழ fபீடுடை, முன்னை யமரர் முழுமுத லானே. |
7.8 |
2865 |
அமரர fமுழுமுத லாகிய ஆதியை, அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை, அமர அழும்பத் துழாவியென் னாவி, அமரர்த் தழுவிற் றினிய கலுமோ. |
7.9 |
2866 |
அகலில் அகலும் அணுகில் அணுகும், புகலு மரியன் பொருவல்ல னெம்மான், நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம், பகலு மிரவும் படிந்து குடைந்தே. |
7.10 |
2867 |
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை, அடைந்த தென் குருகூர்ச்சட கோபன், மிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து, உடைந்து நோய்களை யோடு விக்குமே. |
7.11 |
2868 |
ஓடும்புள்ளேரி, சூடும fதண்டுழாய், நீடு நின்றவை, ஆடும் அம்மானே. |
8.1 |
2869 |
அம்மானாய்ப் பின்னும், எம்மாண fபுமானான, வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே. |
8.2 |
2870 |
கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு, தண்ணார் வேங்கட, விண்ணோர fவெற்பனே. |
8.3 |
2871 |
வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே, நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே. |
8.4 |
2872 |
வைக லும்வெண்ணெய், கைக லந்துண்டான், பொய்க லவாது, என் - மெய்க லந்தானே. |
8.5 |
2873 |
கலந்தென்னாவி, நலங்கொள் நாதன், புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே. |
8.6 |
2874 |
கொண்டா னேழ்விடை, உண்டா னேழ்வையம், தண்டா மஞ்செய்து, என் - எண்டா னானானே. |
8.7 |
2875 |
ஆனா னானாயன், மீனோ டேனமும், தானா னானென்னில், தானா யசங்கே. |
8.8 |
2876 |
சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான், எங்கும் தானாய, நங்கள் நாதனே. |
8.9 |
2877 |
நாதன்ஞாலங்கொள் - பாதன், என்னம்மான், ஓதம் போல்கிளர், வேதநீரனே. |
8.10 |
2878 |
நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன், நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே. |
8.11 |
2879 |
இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும், அவையும fயவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும், அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம், சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. |
9.1 |
2880 |
சூழல fபலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான், வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான் ஆழ நெடுங்கடல fசேர்ந்தான் அவனென fனருகலி லானே. |
9.2 |
2881 |
அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன், கருகிய நீலநன் மேனி வண்ணன்செந fதாமரைக் கண்ணன், பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன், ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே. |
9.3 |
2882 |
உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர் மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே, உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான், கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே. |
9.4 |
2883 |
ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி, செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான், நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக, ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே. |
9.5 |
2884 |
மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அதுவே, காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே, சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன், தூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே. |
9.6 |
2885 |
தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும், தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான் கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி, நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே. |
9.7 |
2886 |
நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம், ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே, பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும், காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே. |
9.8 |
2887 |
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே, அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி, கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே. |
9.9 |
2888 |
நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி, கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார், ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும், மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே. |
9.10 |
2889 |
உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு, இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன், இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு, நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே. |
9.11 |
2890 |
பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு, திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ, ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக் கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. |
10.1 |
2891 |
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில், எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம், மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும், விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. |
10.2 |
2892 |
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும் தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை, கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை, எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. |
10.3 |
2893 |
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால் என்செய்யோம், இனியென்னகுறைவினம்? மைந்தனை மலராள்மணவாளனை, துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். |
10.4 |
2894 |
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர் எண்டானுமின்றியே வந்தியலுமாறு, உண்டானையுலகேழு மோர்மூவடி கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. |
10.5 |
2895 |
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர், நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன், தாயும்தந்தையுமா யிவ்வுலகினில், வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. |
10.6 |
2896 |
எந்தையேயென்று மெம்பெருமானென்றும், சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன், எந்தையெம்பெருமானென்று வானவர், சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. |
10.7 |
2897 |
செல்வநாரண னென்றசொல்கேட்டலும், மல்கும்கண்பனி நாடுவன்மாயமே, அல்லும்நன்பகலு மிடைவீடின்றி, நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. |
10.8 |
2898 |
நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச் செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை, உம்பர்வானவ ராதியஞ்சோதியை, எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. |
10.9 |
2899 |
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன், மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு, மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை, மறப்பனோவினி யானென்மணியையே? |
10.10 |
2900 |
மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர் அணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல் பணிசெயாயிரத் துள்ளிவைபத்துடன், தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. |
10.11 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - அவரவர், அமைவுடை, வானோர், அமரர்கள், உணர்ந்துணர்ந், சடகோபன், அருளிச்செய்தது, பெருமான், நிலைமைய, யவனவன், பலரும், தாயோன், முனிவரும், நாரணன், வணங்கி, வண்குருகூர்ச்சடகோபன், வெண்ணெய், என்பன், ரிறையவர், கண்ணனை, அளவியன்ற, லிதுசொல்லி, நீயலையே, முற்றுமாய், கண்வளரும், யாய்நின்ற, மாயோனே, லாதான், மன்னினான், பின்னும், நிற்கும், தண்ணந், அடியேன், அந்தாதி, முழுநலம், மற்றும், பெருமானே, கண்டக்கா, யம்மானைக், தென்குரு, மிவைமிசை, செய்தான், யாருமோர், முழுவது, முற்றவும், பரந்துளன், முழுவதும், கோபன்சொல், யாயிரத், னெனவறி, நீர்நில, கூர்ச்சடகோபன், அஞ்சிறைய, கென்தூதாய், றொருவாய்ச்சொல், என்றுமொ, துரைத்துரைத், பேருமோ, யுரைத்த, பெரிவளி, கரந்தெங்கும்