முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவிருத்தம் தனியன்
கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது
கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து, ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு, ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த, திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே. |
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவிருத்தம்
2478 |
பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும், இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான் எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா. மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே. |
1 |
2479 |
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண் அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம் தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே. |
2 |
2480 |
குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும், நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல், தண்ணந்துழாய் அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும் தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச் கமே. |
3 |
2481 |
தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந்துழாய்க் கினிநெஞ்ச் க மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப் பனிநஞ்ச மாருத மே,எம்ம தாவி பனிப்பியல்வே? |
4 |
2482 |
பனிபியல் வாக வுடையதண் வாடை,இக் காலமிவ்வூர் பனிபியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந் தண்ணந்துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம் பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே? |
5 |
2483 |
தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு, கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல் நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. |
6 |
2484 |
ஞாலம் பனிப்பச் செரித்து,நன் நீரிட்டுக் கால்சிதைந்து நீலவல் லேறு பொராநின்ற வான மிது,திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங் காலங்கொ லோவறி யேன்,வினை யாட்டியேன் காண்கின்றவே? |
7 |
2485 |
காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள் பாண்குன்ற நாடர் பயில்கின் றன,இதெல் லாமறிந்தோம் மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும் சேண்குன்றம் சென்று,பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே. |
8 |
2486 |
திண்பூஞ் சுடர்_தி நேமியஞ் செல்வர்,விண் ணாடனைய வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்,இவையோ கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி வண்பூங் குவளை, மடமான் விழிக்கின்ற மாயிதழே. |
9 |
2487 |
மாயோன் வடதிரு வேங்கட நாட,வல் லிக்கொடிகாள். நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரை யீர் _மது வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும் ஆயோ அடும்தொண்டை யோ,அறை யோவி தறிவரிதே. |
10 |
2488 |
அரியன யாமின்று காண்கின் றன,கண்ணன் விண்ணனையாய். பெரியன காதம் பொருட்கோ பிரிவெனெ, ஞாலமெய்தற் குரியென வெண்முத்தும் பைம்பொன்னு மேந்தியொ ரோகுடங்கைப் பெரியென கெண்டைக் குலம்,இவை யோவந்து பேர்கின்றவே? |
11 |
2489 |
பேர்கின் றதுமணி மாமை, பிறங்கியள் ளல்பயலை ஊர்கின் றதுகங்குல் ஊழிக ளே,இதெல் லாமினவே ஈர்கின்ற சக்கரத் தெம்பெரு மான்கண்ணன் தண்ணந்துழாய் சார்கின்ற நன்னெஞ்சி னார்,தந்து போன் தனிவளமே. |
12 |
2490 | தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப் பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும் துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந் தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே. |
13 |
2491 |
ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர் தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே? |
14 |
2492 |
கயலோ _மகண்கள்? என்று களிறு வினவிநிற்றீர், அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும் பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. |
15 |
2493 |
பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயி டும்,கண்ணன் விண்ணனையாய். பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும் பலபல சூழ லுடைத்து,அம்ம. வாழியிப் பாயிருளே. |
16 |
2494 |
இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி தூரல், அரவணைமேல் இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வதுபோல் இருள்விரி சோதிப், பெருமா னுறையு மெறிகடலே. |
17 |
2495 |
கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று கடல்கொண் டெழுந்த வதனா லிது,கண்ணன் மண்ணும்விண்ணும் கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ லோ.புயற் காலங்கொலோ. கடல்கொண்ட கண்ணீர், அருவிசெய் யாநிற்கும் காரிகையே. |
18 |
2496 |
காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார் சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே. |
19 |
2497 |
சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம்,இந் நோயினதென் றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது வேல.நில்நீ என்மொழி கேண்மினென் அம்மனை மீர்.உல கேழுமுண்டான் சொல்மொழி, மாலயந் தண்ணந்து ழாய்கொண்டு சூட்டுமினே. |
20 |
2498 |
சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தி,விண் ணோர்கள்நன்னீர் ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்கு,μர் மாயையினால் ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன் கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே. |
21 |
2499 |
கொம்பார் தழைகை சிறுநா ணெறிவிலம் வேட்டைகொண்டாட் டம்பார் களிறு வினவுவ தையர்புள் ளூரும்கள்வர் தம்பா ரகத்தென்று மாடா தனதம்மில் கூடாதன வம்பார் வினாச்சொல்ல வோ,எம்மை வைத்ததிவ் வான்புனத்தே? |
22 |
2500 |
புனமோ புனத்தய லேவழி போகும் அருவினையேன் , மனமோ மகளிர்_ங் காவல்சொல் லீர்,புண்ட ரீகத்தங்கேழ் வனமோ ரனையகண் ணான்கண்ணன் வானா டமரும்தெய்வத் தினமோ ரனையீர்க ளாய்,இவை யோ_ம் இயல்புகளே? |
23 |
2501 |
இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், μரோகுடங்கைக் கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால் புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க் கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே? |
24 |
2502 |
எங்கோல் வளைமுத லா,கண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்,திறல் சேரமர் தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோன் நங்கோ னுகக்கும் துழாய்,எஞ்செய் யாதினி நானிலத்தே ? |
25 |
2503 |
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட, வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை, கடந்தபொன்னே. கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெ காவுதுஅம்பூந் தேனிளஞ் சோலையப் பாலது,எப் பாலைக்கும் சேமத்ததே. |
26 |
2504 |
சேமம்செங் கோனரு ளே,செரு வாரும்நட் பாகுவரென் றேமம் பெறவையம் சொல்லும்மெய் யே,பண்டெல் லாம்மறைகூய் யமங்க டோறெரி வீசும்நங் கண்ணனந் தண்ணந்துழாய்த் தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே. |
27 |
2505 |
தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம், நடுவே வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்,வள் வாயலகால் புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா.அருளாய் எண்ணந் துழாவு மிடத்து,உள வோபண்டும் இன்னன்னவே? |
28 |
2506 |
இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமா னுலகில்பெண் தூதுசெல்லா அன்னன்ன நீர்மைகொ லோ,குடிச் சீர்மையி லன்னங்களே . |
29 |
2507 |
அன்னம்செல் வீரும்வண் டானம்செல் வீரும் தொழுதிரந்தேன் முன்னம்செல் வீர்கள் மறவேல்மி னோகண்ணன் வைகுந்தனோ டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர் இன்னஞ்செல் லீரோ, இதுவோ தகவென் றிசைமின்களே . |
30 |
2508 |
இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல் அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள் திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே . |
31 |
2509 |
மேகங்க ளோ.உரை யீர்,திரு மால்திரு மேனியொக்கும் யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான் மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து_ந்தம் ஆகங்கள் நோவ, வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? |
32 |
2510 |
அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால் பொருளோ எனுமிகழ் வோ?இவற் றின்புறத் தாளென்றெண்ணோ? தெருளோம் அரவணை யீர்,இவள் மாமை சிதைக்கின்றதே. |
33 |
2511 |
சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறி,தன் சீறடியால் உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார் ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப் பதைக்கின்ற மாதின் திறத்துஅறி யேஞ்செயற் பாலதுவே. |
34 |
2512 |
பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம் சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே. |
35 |
2513 |
துழாநெடுஞ் சூழிரு ளென்று,தன் தண்தா ரதுபெயரா எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோ.இலங்கைக் குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே . |
36 |
2514 |
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர், கொலையில்வெய்ய கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து, அருவினையேன் நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற தொடுங்கா லொசியு மிடை,இள மாஞ்சென்ற சூழ்கடமே. |
37 |
2515 |
கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள் தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல், குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து நடமா டியபெரு மான்,உரு வொத்தன நீலங்களே. |
38 |
2516 |
நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள் போல, பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர் ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான் கோலம் கரிய பிரான்,எம் பிரான்கண்ணின் கோலங்களே. |
39 |
2517 |
கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர் . ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ. |
40 |
2518 |
என்றும்புன் வாடை யிதுகண் டறிதும்,இவ் வாறுவெம்மை ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம், μங்கசுரர் பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள் மன்றில் நிறைபழி தூற்றி,நின் றென்னைவன் காற்றடுமே. |
41 |
2519 |
வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த, மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன, மண்ணும்விண்ணும் என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த தன்கால்பணிந்தவென் பால்,எம்பி ரான தடங்கண்களே. |
42 |
2520 |
கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே, வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால் விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும் எண்ணு மிடத்தது வோ,எம்பி ரான தெழில்நிறமே? |
43 |
2521 |
நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று, அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும், அங்கங்கெல்லாம் உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும் பெறமுயன் றாரில்லை யால்,எம்பி ரான்றன் பெருமையையே. |
44 |
2522 |
பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல் ஒருங்கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவர்நம்போல் வரும்கேழ் பவருள ரே?தொல்லை வாழியம் சூழ்பிறப்பும் மருங்கே வரப்பெறு மே,சொல்லு வாழி மடநெஞ்சமே. |
45 |
2523 |
மடநெஞ்ச மென்றும் தமதென்றும், μர்கரு மம்கருதி, விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்,அப் பொன்பெயரோன் தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த் திடநெஞ்ச மாய்,எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே. |
46 |
2524 |
திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை விரிகின் றதுமுழு மெய்யும்,என் னாங்கொலென் மெல்லியற்கே? |
47 |
2525 |
மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில் மிளிர்தந்தாங்கே செல்லிய செல்கைத் துலகையென் காணும்,என் னாலும்தன்னைச் சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்? பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே. |
48 |
2526 |
பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்,இப் பாயிருள்போல் கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய,மண் ணேரன்ன ஒண்ணுதலே. |
49 |
2527 |
ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர் நண்ணுதல் வேண்டும் வலவ. கடாகின்று, தேன்நவின்ற வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய் மண்முதல் சேர்வுற்று, அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே. |
50 |
2528 |
மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான். அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாது கடல்,பரதர் விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத் துலைகொண்டு தாயம் கிளர்ந்து,கொள் வானொத் தழைக்கின்றதே. |
51 |
2529 |
அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய் மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய் அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய் மழைக்கண்ண நீர்,திரு மால்கொடி யானென்று வார்கின்றதே. |
52 |
2530 |
வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம், சேரா யினதெய்வ நன்னோ யிது,தெய்வத் தண்ணந்துழாய்த் தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ் வேரா யினும்,நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே. |
53 |
2531 |
வீசும் சிறகால் பறத்திர்,விண் ணாடு_ங் கட்கெளிது பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண் டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார் மாசின் மலரடிக் கீழ்,எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே |
54 |
2532 |
வண்டுக ளோ.வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ, உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய் மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல் விண்டுகள் வாரும், மலருள வோ_ம் வியலிடத்தே? |
55 |
2533 |
வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால், உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழி,μர் தண்தென்றல்வந் தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின்தேன் புயலுடை நீர்மையி னால்,தட விற்றென் புலன்கலனே. |
56 |
2534 |
புலக்குண் டலப்புண்ட ரீகத்த போர்க்கொண்டை, வல்லியொன்றால் விலக்குண் டுலாகின்று வேல்விழிக் கின்றன, கண்ணன் கையால் மலக்குண் டமுதம் சுரந்த மறிகடல் போன்றவற்றால் கலக்குண்ட நான்றுகண் டார்,எம்மை யாரும் கழறலரே. |
57 |
2535 |
கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய் நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா அழறலர் தாமரைக் கண்ணன், என் னோவிங் களக்கின்றதே? |
58 |
2536 |
அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்,அந் தண்ணந்துழாய்க்கு உளப்பெருங் காதலில் நீளிய வாயுள, μங்குமுந்நீர் வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன் தளப்பெரு நீண்முறு வல்,செய்ய வாய தடமுலையே. |
59 |
2537 |
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம் விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பர மே.பெருமான் மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே? |
(2) 60 |
2538 |
வாசகம் செய்வது நம்பர மே?, தொல்லை வானவர்தம் நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும் வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால் தாயவன், ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே. |
61 |
2539 |
இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது, அறையோ. எனநின் றதிரும் கருங்கடல், ஈங்க்கிவள்தன் நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால் முறையோ, அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே. |
62 |
2540 |
வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய, தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற் கெண்ணம் புகுந்து,அடி யேனொடிக் கால மிருகின்றதே. |
63 |
2541 |
இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர், யாமும் அவா ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்,திரு நாமச்சொல் கற்றனமே. |
64 |
2542 |
கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்று,μ ரோகருமம் உற்றுப் பயின்று செவியொடு சாவி, உலகமெல்லாம் முற்றும் விழுங்க்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் உற்றும் உறாதும், மிளீர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே. |
65 |
2543 |
உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்,எரி நீர்வளிவான் மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள் கண்ணாய் அருவினை யேன்,உயி ராயின காவிகளே. |
66 |
2544 |
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று, ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு, அசுரர்செற்ற மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர் தூவியம் பேடையன் னாள்,கண்க ளாய துணைமலரே. |
67 |
2545 |
மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும் புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ் நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய். கலந்தார் வரவெதிர் கொண்டு,வன் கொன்றைகள் கார்த்தனவே. |
68 |
2546 |
காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான் போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை, புவனியெல்லாம் நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே? வாரேற் றிளமுலை யாய்,வருந் தேலுன் வளைத்திறமே. |
69 |
2547 |
வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல், தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை, விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை உளைவான் புகுந்து,இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே. |
70 |
2548 |
ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம்,பழங்கண்டு ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு,அ தேகொண்டன்னை நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும் தோழிக ளோ.உரை யீர்,எம்மை அம்மனை சூழ்கின்றவே. |
71 |
2549 |
சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை, போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று வாழ்கின்ற வாறிது வோ,வந்து தோன்றிறு வாலியதே. |
72 |
2550 |
வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும், பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம் போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும் சால்பின் தகைமைகொ லாம்,தமி யாடி தளர்ந்ததுவே? |
73 |
2551 |
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண் வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக் கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய் அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந் தோவந் துலாகின்றதே. |
74 |
2552 |
உலாகின்ற கெண்டை ஒளியம்பு,எம் ஆவியை ஊடுருவக் குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத் தீர்,குனி சங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார் நிலாகின்ற வைகுந்த மோ,வைய மோ_ம் நிலையிடமே? |
75 |
2553 |
இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய், வடம்போ தினையும் மடநெஞ்ச மே,நங்கள் வெள்வளைக்கே விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின் தடம்போ தொடுங்க,மெல் லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே. |
76 |
2554 |
திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே. |
77 |
2555 |
நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோள்துணித்த வலியும் பெருமையும் யாஞ்சொல்லும் நீர்த்தல்ல, மைவரைபோல் பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே. |
78 |
2556 |
வேதனை வெண்புரி _லனை, விண்ணோர் பரவநின்ற நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும் சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே. |
79 |
2557 |
சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த, பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த பேரர சே.எம் விசும்பர சே.எம்மை நீத்துவஞ்சித்த μரர சே.அரு ளாய்,இரு ளாய்வந் துறுகின்றதே. |
80 |
2558 |
உருகின்ற கன்மங்கள் மேலான μர்ப்பில ராய்,இவளைப் பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த் துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே. |
81 |
2559 |
எரிகொள்செந் நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய், விரிகின்ற வண்ணத்த எம்பெரு மான்கண்கள், மீண்டவற்றுள் எரிகொள்செந் தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும் விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே? |
82 |
2560 |
விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை, முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர் கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும் நைவுமெல்லாம் தளரில் கொலோவறி யேன்,உய்ய லாவதித் தையலுக்கே. |
83 |
2561 |
தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும், ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம் கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான் மையவண் ணா.மணியே,முத்த மே.என்றன் மாணிக்கமே. |
84 |
2562 |
மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி, ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த மாணிக்க மே.என் மரகத மே.மற்றொப் பாரையில்லா ஆணிப்பொன் னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே. |
85 |
2563 |
அடைக்கலத் தோங்கு கமலத் தலரயன் சென்னியென்னும், முடைக்கலத் தூண்முன் அரனுக்கு நீக்கியை, ஆழிசங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன் றாய்ச்சிவன் தாம்புகளால் புடைக்கலந் தானை,எம் மானையென் சொல்லிப் புலம்புவனே? |
86 |
2564 |
புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும், பூங்கழிபாய்ந் தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின் வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம் சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே? |
87 |
2565 |
திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும் திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர் திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங் கேவரும் தீவினையே? |
88 |
2566 |
தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை, பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால் தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே? |
89 |
2567 |
தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால், நீலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம் தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே. |
90 |
2568 |
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும் ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே. |
91 |
2569 |
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதிவாய், நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நீன்னைவிண்ணோர் தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே. |
92 |
2570 |
காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர் மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும் காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே. |
93 |
2571 |
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே, மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார், எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும் அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே? |
94 |
2572 |
யாதானு மோராக் கையில்புக்கு,அங் காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்ன மே,அதனால் யாதானும் பற்றிநீங் கும்விர தத்தைநல் வீடுசெய்யும் மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே. |
95 |
2573 |
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய் இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே. |
96 |
2574 |
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க் கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோகண்கள் துஞ்சுதலே? |
97 |
2576 |
துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற, எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும் தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே. |
98 |
2576 |
ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும் ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர் வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும் ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே |
(2) 99 |
2577 |
நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர் வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம் பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே |
(2) 100 |
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம் - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - கண்ணன், திருமால், பிரானார், தண்ணந், செங்கோல், தொல்லை, கடல்கொண், கொண்டு, திருச்சக், விண்ணோர், உலகளந்த, வண்ணம், வாழியரோ, புகுந்து, தண்ணந்துழாய், பெருமான், சுடர்விளக், மடநெஞ்ச, ஒருங்கே, மாதின், தன்னொடும், விண்ணும், ணம்பயலை, மதிவிகற்பால், பொலிந்தன, அங்கங்கெல்லாம், படியன்ன, ஆணிப்பொன், லார்கள், எரிகொள்செந், கனகுரல், அன்னகண்டும், மாயம்செவ்வே, திருவடி, துழாய்மலர்க்கே, திங்களம், கங்குல், யாரும், கருங்கடல், மேல்பள்ளி, நொந்து, அருவினை, முற்றும், நாயகன், தண்ணந்துழாய்த், பனிப்புயல், வீசும், பனிபியல், சுமந்து, காலங்கொ, காண்கின், யாட்டியேன், தான்முடி, யாமிலம், பொல்லா, நம்மாழ்வார், ஒருவிருத், உயிரளிப்பான், கின்றன, சூழ்குழற்கே, கண்ணன்விண், றனகளும், வேங்கட, வெண்ணை, தண்ணந்து, அம்மனை, அருவினையேன், திருவிருத்தம், மிளிரும், அன்னன்ன, காலத்தும், யாநிற்கும், செங்கோ, விண்ணனையாய், இருள்விரி, பெருமா, அருவிசெய், மண்ணும்விண்ணும், திருவேங்