முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார்
தேசிகன் திருவடிகளே சரணம்
திருப்பல்லாண்டு ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக| ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி|| |
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள் கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் பாதங்கள்யாமுடையபற்று. |
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
---------
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
திருப்பல்லாண்டு
காப்பு
குறள்வெண்செந்துறை
குறள்வெண்செந்துறை
1 |
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு |
1 |
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
2 |
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. |
2 |
3 |
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம் ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. |
3 |
4 |
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. |
4 |
5 |
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. | 5 |
6 |
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில் அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. |
6 |
7 |
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. |
7 |
8 |
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. |
8 |
9 |
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. |
9 |
10 |
எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. |
10 |
11 |
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன் செல்வனைப்போலத் திருமாலே.நானும்உனக்குப்பழவடியேன் நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி பல்வகையாலும்பவித்திரனே.உன்னைப்பல்லாண்டுகூறுவனே. |
11 |
12 |
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும் வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. |
12 |
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - பெரியாழ்வார், திருவடிகளே, பல்லாண்டுகூறுதுமே, திருவோணத்திருவிழவில், அருளிச், திருப்பல்லாண்டு, நமோநாராயணாயவென்று