முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
மூன்றாம் திருவந்தாதி தனியன்
குருகை காவலப்பன் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள் காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத் திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே, உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து. |
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி
2282 |
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று. |
(2) 1 |
2283 |
இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன், பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை மருக்கண்டு கொண்டேன் மனம். |
2 |
2284 |
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச் செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன், வருநரகம் தீர்க்கும் மருந்து. |
3 |
2285 |
மருந்தும் பொருளும் அமுதமும் தானே, திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும் நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால், அன்றுலகம் தாயோன் அடி. |
4 |
2286 |
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன், படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம் μராழி வெய்யோ னொளியு மதன்றே ஆராழி கொண்டாற் கழகு? |
5 |
2287 |
அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம், அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ, கங்கைநீர் கான்ற கழல்? |
6 |
2288 |
கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை, பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங் கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை, நண்ணற் கரியானை நாம். |
7 |
2289 |
நாமம் பலசொல்லி நாராய ணாவென்று, நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய், கண்ணனையே காண்கநங் கண். |
8 |
2290 |
கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும், மண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில் கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன், திருமா மணிவண்ணன் தேசு. |
9 |
2291 |
தேசும் திறலும் திருவும் உருவமும், மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில் வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத, நலம்புரிந்து சென்றடையும் நன்கு. |
10 |
2292 |
நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும் பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப் பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார் _ற்கடலான் _ண்ணறிவி னான். |
11 |
2293 |
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில், செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும் நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும் பைங்கோத வண்ணன் படி. |
12 |
2294 |
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம், ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே, மாகாய மாய்நின்ற மாற்கு. |
13 |
2295 |
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு, _ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பணிந்து. |
14 |
2296 |
பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத, பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங் கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன் மனந்த னணைக்கிடக்கும் வந்து. |
15 |
2297 |
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம் அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன், திருவல்லிக் கேணியான் சென்று. |
(2) 16 |
2298 |
சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால், என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும் இறவாத எந்தை இணையடிக்கே யாளாய், மறவாது வாழ்த்துகவென் வாய். |
17 |
2299 |
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி, அஞ்சா திருக்க அருள். |
18 |
2300 |
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது, முந்தையராய் நிற்பார்க்கு முன்? |
19 |
2301 |
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே திருமாலே.செங்க ணெடியானே, எங்கள் பெருமானே. நீயிதனைப் பேசு. |
20 |
2302 |
பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ வக்கரனைக் கொன்றான் வடிவு. |
21 |
2303 |
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும் கடியார் மலர்தூவிக் காணும் - படியானை, செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே, மெய்ம்மையே காண விரும்பு. |
22 |
2304 |
விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார் சுரும்பு தொளையில்சென் று-த, அரும்பும் புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே, மனம்துழாய் மாலாய் வரும். |
23 |
2305 |
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும், நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும் சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும் தொடராழி நெஞ்சே. தொழுது. |
24 |
2306 |
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம், முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும் சேயானை நெஞ்சே. சிறந்து? |
25 |
2307 |
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும், வேங்கடமும் வெகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம்கடவார் தண்டுழா யார். |
26 |
2308 |
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார், காரே மலிந்த கருங்கடலை, நேரே கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து? |
27 |
2309 |
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப் பேய்ச்சிபா லுண்ட பிரான். |
28 |
2310 |
பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய், தெருளா மொழியானைச் சேர்ந்து. |
29 |
2311 |
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, இறைபாடி யாய இவை. |
30 |
2312 |
இவையவன் கோயில் இரணியன தாகம், அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான் பாகத்தான் பாற்கடலு ளான். |
31 |
2313 |
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், _ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், - பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான், குருந்தொசித்த கோபா லகன். |
32 |
2314 |
பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம் மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம் அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. |
33 |
2315 |
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல், நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே. காண். |
34 |
2316 |
காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண் தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற் கழல்பாடி யாம்தொழுதும் கை. |
35 |
2317 |
கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம், வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய படைபரவ பாழி பனிநீ ருலகம், அடியளந்த மாயன் அவற்கு. |
36 |
2318 |
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான், உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும் பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம், திகழும் திருமார்வன் தான். |
37 |
2319 |
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும், தானே தவவுருவும் தாரகையும், - தானே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இறை. |
38 |
2320 |
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய், மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான், உள்ளத்தி னுள்ளே உளன். |
39 |
2321 |
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும் உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய், விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான், மண்ணெடுங்கத் தானளந்த மன். |
40 |
2322 |
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும், துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும் குடையாக ஆகாத்த கோ. |
41 |
2323 |
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி, மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி அரியுருவ மாகி இரணியன தாகம், தெரியுகிரால் கீண்டான் சினம். |
42 |
2324 |
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து, புனமேய பூமி யதனை, - தனமாகப் பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார், μரகலத் துள்ள துலகு. |
43 |
2325 |
உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ் அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே, பூரித்தென் நெஞ்சே புரி. |
44 |
2326 |
புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித், திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள் மண்கோட்டுக் கொண்டான் மலை. |
45 |
2327 |
மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட் டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான், பிண்டமாய் நின்ற பிரான். |
46 |
2328 |
நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம் சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்று துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள் நரகவாய் கீண்டாயும் நீ. |
47 |
2329 |
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய், நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய், தேவா சுரம்பொருதாய் செற்று? |
48 |
2330 |
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப் பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல் முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,மூரிச் சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. |
49 |
2331 |
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால், தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான், அணிநீல வண்ணத் தவன். |
50 |
2332 |
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான், அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர், இலங்கா புரமெரித்தான் எய்து. |
51 |
2333 |
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய், எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய் முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. |
52 |
2334 |
முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை, இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர் மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய், தண்ணலங்கல் மாலையான் தாள். |
53 |
2335 |
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு, பெண்ணகலம் காதல் பெரிது. |
54 |
2336 |
பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு, கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால் பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன் நீணெடுங்கண் காட்டும் நிறம். |
55 |
2337 |
நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று, இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு? |
56 |
2338 |
பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி, மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து கருடன்மேல் கொண்ட கரியான் கழலே, தெருடன்மேல் கண்டாய் தெளி. |
57 |
2339 |
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள் மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. |
58 |
2340 |
வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய், தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும் திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள் பெருமான் அடிசேரப் பெற்று. |
59 |
2341 |
பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம், முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப் பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. |
60 |
2342 |
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம், கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை, இளங்குமரன் றன்விண் ணகர். |
(2) 61 |
2343 |
விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. |
62 |
2344 |
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, இரண்டுருவு மொன்றாய் இசைந்து. |
63 |
2345 |
இசைந்த அரவமும் வெற்பும் கடலும், பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெ காவில், கிடந்திருந்து நின்றதுவும் அங்கு? |
64 |
2346 |
அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து, மங்க இரணியன தாகத்தை, பொங்கி அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே, கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. |
65 |
2347 |
காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள், ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த மதுகை டவரும் வயிறுருகி மாண்டார், அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. |
66 |
2348 |
ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய், μங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில் பகரு மதியென்றும் பார்த்து. |
67 |
2349 |
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள் விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. |
68 |
2350 |
ு வேங்கடம் பாடும், வியன்துழாய்க் கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும். |
69 |
2351 |
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன் விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே, கண்டு வணங்கும் களிறு. |
70 |
2352 |
களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி, ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள் குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. |
71 |
2353 |
குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை, சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை இளங்குமரர் கோமான் இடம். |
72 |
2354 |
இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி, வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே, நாத்தன்னா லுள்ள நலம். |
73 |
2355 |
நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய், நிலமே புரண்டுபோய் வீழ, - சலமேதான் வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான், தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. |
74 |
2356 |
சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய் ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன் புனவேங்கை நாறும் பொருப்பு. |
75 |
2357 |
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய வெகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால், அகாவே தீவினைகள் ஆய்ந்து. |
76 |
2358 |
ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட் கரண். |
77 |
2359 |
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன், முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல் ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே, μதுகதி மாயனையே μர்த்து. |
78 |
2360 |
μர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து, பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி, நிரையார மார்வனையே நின்று. |
79 |
2361 |
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள், ஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, - வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே, நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. |
80 |
2362 |
நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன் நெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, μராது நிற்ப துணர்வு? |
81 |
2363 |
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை, எங்கணைந்து காண்டும் இனி? |
82 |
2364 |
இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும், இனியவன் காண்பரிய னேலும், - இனியவன் கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தி னுள்ளே யுளன். |
83 |
2365 |
உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத் துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே, கண்டா ருகப்பர் கவி? |
84 |
2366 |
கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய், செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய் ஏற்றுயிரை அட்டான் எழில்? |
85 |
2367 |
எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத் தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல, கார்வானம் காட்டும் கலந்து. |
86 |
2368 |
கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும் கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை, அந்திவான் காட்டும் அது. |
87 |
2369 |
அதுநன் றிதுதீதென் றையப் படாதே, மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள் முன்னங் கழலும் முடிந்து. |
88 |
2370 |
முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம் படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள் தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. |
89 |
2371 |
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள் எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ, வண்டுழாய் மாலளந்த மண்? |
90 |
2372 |
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான், வயிற்றினோ டாற்றா மகன். |
91 |
2373 |
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன், மகனா மவன்மகன்றன் காதல் - மகனை சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே நிறைசெய்தென் நெஞ்சே. நினை. |
92 |
2374 |
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால், அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை, உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. |
93 |
2375 |
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி, வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து, பொன்றாமை மாயன் புகுந்து. |
94 |
2376 |
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய் இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும் சிந்தப் பிளந்த திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. |
95 |
2377 |
வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன், அடித்தா மரையாம் அலர். |
96 |
2378 |
அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய, மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட் கெண்ணத்தா னாமோ இமை? |
97 |
2379 |
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும், அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான், துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. |
98 |
2380 |
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான், அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக் கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு. |
(2) 99 |
2381 |
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண், தேனமரும் பூமேல் திரு. |
(2) 100 |
பேயாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - வேங்கடமே, நெஞ்சே, வண்டறையும், காட்டும், வேங்கடம், எண்டிசையும், இரணியன, பெருமானே, மாலையான், சக்கரத்தான், மணிவண்ணன், மார்வன், சென்று, மேலொருநாள், வாய்ந்த, கொண்டான், திருமால், ஆய்ச்சி, நெஞ்சமே, நீயன்றே, நாளும், வேங்கடத்தான், தண்டுழாய், இனியவன், கண்டேன், அழகன்றே, வண்ணன், தோன்றும், டண்டம்போய், உளன்கண்டாய், ஆநிரைகள், அரியுருவ, ரேலும், மரைநெடுங்கண், னுள்ளே, உள்ளத்தி, அலரெடுத்த, சார்வு, வெண்சங்கம், அடித்தா, மாமேனி, கலந்து, நமக்கென்றும், கார்த்த, நின்று, புகுந்து, சூழும், வாணன்தோள், னேலும், கதிரிலகு, கொண்டெறிந்தான், விளங்கனிக்குக், குழவியாய், முயன்று, மேனாள், ஏய்ந்த, பின்னைக்காய், கோமானை, காண்பரிய, தண்டுழாய்க், அந்திப், வேங்கடமும், கார்கடல்நீர், வண்ணம், தாயோன், கரியானை, சேயானை, மண்ணளந்த, நன்னெஞ்சே, நாமங்கை, செங்கண்மா, ருள்ளான், பேயாழ்வார், திருக்கண்டேன், திருவந்தாதி, பொன்மேனி, திகழும், திருமாலே, வரைமார்வில், ஏழ்பிறப்பும், திருமா, நால்வேதத், ருலகம், சூழ்கழலே, மானான், மூன்றாம், பேய்ச்சிபா, உலகெல்லாம், சேர்ந்து, பிரான், காற்றும், பொன்னங், இணையடிக்கே, நீரேற்று, துள்ளான், ஆலிலைமேல், சேவடிக்கே, மெய்ம்மையே, கொன்றான், எங்கள், வேளுக்கை