முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் »
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
முதல் பத்து
முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
கலிவிருத்தம்
13 |
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக் கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. |
1 |
14 |
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார் பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. |
2 |
15 |
பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு வோணத்தா நுலகாளுமென்பார்களே. |
3 |
16 |
உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. |
4 |
17 |
கொண்டதாளுறி கோலக்கொடுமழு தண்டினர் பறியோலைச்சயனத்தர் விண்டமுல்லை யரும்பன்னபல்லினர் அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். |
5 |
18 |
கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. |
6 |
19 |
வாயுள்வையகம்கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. |
7 |
20 |
பத்துநாளும்கடந்த இரண்டாநாள் எத்திசையும் சயமரம்கோடித்து மத்தமாமலை தாங்கியமைந்தனை உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. |
8 |
21 |
கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். |
9 |
22 |
செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் மன்னுநாரணன் நம்பிபிறந்தமை மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப் பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. |
10 |
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
23 |
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர். வந்துகாணீரே. |
1 |
24 |
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும் பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர். வந்துகாணீரே. |
2 |
25 |
பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும் கணைக்கால்இருந்தவாகாணீரே காரிகையீர். வந்துகாணீரே. |
3 |
26 |
உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர். வந்துகாணீரே. |
4 |
27 |
பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் குறங்குவளைவந்துகாணீரே குவிமுலையீர். வந்துகாணீரே. |
5 |
28 |
மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர். வந்துகாணீரே. |
6 |
29 |
இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன் நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும் மருங்கும்இருந்தவாகாணீரே வாணுதலீர். வந்துகாணீரே. |
7 |
30 |
வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் நந்தன்மதலைக்கு நன்றுமழகிய உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர். வந்துகாணீரே. |
8 |
31 |
அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த உதரம்இருந்தவா காணீரே ஒளிவளையீர். வந்துகாணீரே. |
9 |
32 |
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை குருமாமணிப்பூண் குலாவித்திகழும் திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர். வந்துகாணீரே. |
10 |
33 |
நாள்களோர்நாலைந்து திங்களளவிலே தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் தோள்கள்இருந்தவாகாணீரே சுரிகுழலீர். வந்துகாணீரே. |
11 |
34 |
மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய கைத்தலங்கள்வந்துகாணீரே கனங்குழையீர். வந்துகாணீரே. |
12 |
35 |
வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய கண்டம்இருந்தவாகாணீரே காரிகையீர். வந்துகாணீரே. |
13 |
36 |
எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச் செந்தொண்டைவாய்வந்துகாணீரே சேயிழையீர். வந்துகாணீரே. |
14 |
37 |
நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால் நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு வாக்கும்நயனமும் வாயும்முறுவலும் மூக்கும்இருந்தவாகாணீரே மொய்குழலீர். வந்துகாணீரே. |
15 |
38 |
விண்கொளமரர்கள் வேதனைதீர முன் மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர். வந்துகாணீரே. |
16 |
39 |
பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற உருவுகரிய ஒளிமணிவண்ணன் புருவம்இருந்தவாகாணீரே பூண்முலையீர். வந்துகாணீரே. |
17 |
40 |
மண்ணும்மலையும் கடலும்உலகேழும் உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை திண்ணம்இருந்தவாகாணீரே சேயிழையீர். வந்துகாணீரே. |
18 |
41 |
முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும் சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன் நெற்றிஇருந்தவாகாணீரே நேரிழையீர். வந்துகாணீரே. |
19 |
42 |
அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப மழகன்றினங்கள் மறித்துத்திரிவான் குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர். வந்துகாணீரே. |
20 |
தரவு கொச்சகக்கலிப்பா
43 |
சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் விருப்பாலுரைத்த இருபதோடொன்றும் உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. |
21 |
மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)
கலித்தாழிசை
44 |
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் மாணிக்குறளனே. தாலேலோ வையமளந்தானே. தாலேலோ. |
1 |
45 |
உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் உடையாய். அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே. தாலேலோ. |
2 |
46 |
என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே. தாலேலோ. |
3 |
47 |
சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் செங்கண்கருமுகிலே. தாலேலோ தேவகிசிங்கமே. தாலேலோ. |
4 |
48 |
எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு வழுவில்கொடையான் வயிச்சிரவணன் தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே. தாலேலோ. |
5 |
49 |
ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும் சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும் மாதக்கவென்று வருணன்விடுதந்தான் சோதிச்சுடர்முடியாய். தாலேலோ சுந்தரத்தோளனே. தாலேலோ. |
6 |
50 |
கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும் வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள் கோனே. அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. |
7 |
51 |
கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் நச்சுமுலையுண்டாய். தாலேலோ நாராயணா. அழேல்தாலேலோ. |
8 |
52 |
மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் அய்யா. அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே. தாலேலோ. |
9 |
தரவு கொச்சகக் கலிப்பா
53 |
வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. |
10 |
நான்காம் திருமொழி - தன் முகத்து
(சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)
கலிநிலைத்துறை
54 |
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய் பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ. நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. |
1 |
55 |
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான் தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான் அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல் மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. |
2 |
56 |
சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும் எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய் வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. |
3 |
57 |
சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண் தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். |
4 |
58 |
அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான் குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல் புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. |
5 |
59 |
தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில் விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. |
6 |
60 |
பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள் ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன் மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல் மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. |
7 |
61 |
சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண் நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். |
8 |
62 |
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான் ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண் வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. |
9 |
63 |
மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர் வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. |
10 |
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
64 |
உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா. பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே. செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச் ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை |
1 |
65 |
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை |
2 |
66 |
நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே. தம்மனையானவனே. தரணிதலமுழுதும் விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும் அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை |
3 |
67 |
வானவர்தாம்மகிழவன்சகடமுருள கானகவல்விளவின்காயுதிரக்கருதிக் தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன் ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை |
4 |
68 |
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை |
5 |
69 |
காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா. தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா. ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை |
6 |
70 |
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் நப்பினைதன்திறமாநல்விடையேழவிய தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை |
7 |
71 |
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை |
8 |
72 |
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை |
9 |
73 |
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை |
10 |
74 |
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் |
11 |
ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
(கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
75 |
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல்குட்டனே. சப்பாணி. |
1 |
76 |
பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே. கொட்டாய்சப்பாணி. |
2 |
77 |
பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல் நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே. சப்பாணி. |
3 |
78 |
தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம் கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. |
4 |
79 |
புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து அட்டியமுக்கி அகம்புக்கறியாமே சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண் பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. |
5 |
80 |
தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே. சப்பானி. |
6 |
81 |
பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே. சப்பாணி. |
7 |
82 |
குரக்கினத்தாலே குரைகடல்தன்னை நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை அரக்கர்அவிய அடுகணையாலே நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே. சப்பாணி. |
8 |
83 |
அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே. சப்பாணி. |
9 |
84 |
அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே. சப்பாணி. |
10 |
தரவு கொச்சகக்கலிப்பா
85 |
ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும் வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. |
11 |
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
86 |
தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல் உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. |
1 |
87 |
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. |
2 |
88 |
மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும் தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. |
3 |
89 |
கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. |
4 |
90 |
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல் பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. |
5 |
91 |
ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. |
6 |
92 |
படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. |
7 |
93 |
பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. |
8 |
94 |
வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. |
9 |
95 |
திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன் திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம் தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. |
10 |
96 |
ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார் மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. |
11 |
எட்டாம் திருமொழி -- பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
97 |
பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி தன்னியலோசை சலஞ்சலனென்றிட மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல் என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. |
1 |
98 |
செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல் பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. |
2 |
99 |
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. |
3 |
100 |
நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன தேறிஅவளும் திருவுடம்பில்பூச ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று ஏறவுருவினாய். அச்சோவச்சோ எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. |
4 |
101 |
கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை அழலவிழித்தானே. அச்சோவச்சோ ஆழியங்கையனே. அச்சோவச்சோ. |
5 |
102 |
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய் காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே. ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. |
6 |
103 |
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் தக்கதிதன்றென்று தானம்விலக்கிய சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையனே. அச்சோவச்சோ சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. |
7 |
104 |
என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன் முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன மன்னுநமுசியை வானில்சுழற்றிய மின்னுமுடியனே. அச்சோவச்சோ வேங்கடவாணனே. அச்சோவச்சோ. |
8 |
105 |
கண்டகடலும் மலையும்உலகேழும் முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. |
9 |
106 |
துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட மன்னியநான்மறை முற்றும்மறைந்திட பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று அன்னமதானானே. அச்சோவச்சோ அருமறைதந்தானே. அச்சோவச்சோ. |
10 |
தரவு கொச்சகக்கலிப்பா
107 |
நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல் நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. |
11 |
ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால்வந்த கலித்தாழிசை
108 |
வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல் சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என் குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். |
1 |
109 |
கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில் கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி தன்கணத்தாலே சதிராநடந்துவந்து என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். |
2 |
110 |
கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம் ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். |
3 |
111 |
நாந்தகமேந்திய நம்பிசரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். |
4 |
112 |
வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான். |
5 |
113 |
சத்திரமேந்தித் தனியொருமாணியாய் உத்தரவேதியில் நின்றஒருவனை கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான்என்புறம்புல்குவான். |
6 |
114 |
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும் மெத்தத்திருவயிறார விழுங்கிய அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆழியான்என்னைப்புறம்புல்குவான். |
7 |
115 |
மூத்தவைகாண முதுமணற்குன்றேறி கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி வாய்த்தமறையோர் வணங்க இமையவர் ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். |
8 |
116 |
கற்பகக்காவு கருதியகாதலிக்கு இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில் நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். |
9 |
தரவு கொச்சகக்கலிப்பா
117 |
ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர் வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - வந்துகாணீரே, அச்சோவச்சோ, தாலேலோ, தளர்நடைநடவானோ, ஆடுகஆடுகவே, திருமொழி, ஆயர்கள்போரேறே, சப்பாணி, எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை, கலித்தாழிசை, கொச்சகக்கலிப்பா, ஏழுலகும்முடையாய், ஆடுகசெங்கீரை, அழைத்தல், கொட்டாய்சப்பாணி, மகிழ்ந்தோடிவா, காணீரே, சேயிழையீர், அழேல்அழேல்தாலேலோ, எம்பெருமான், தக்கமாமணிவண்ணன்வாசுதேவன், எங்கும், ஆழியங்கையனே, வாராஅச்சோவச்சோ, உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான், அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான், எம்பிரான்என்னைப்புறம்புல்குவான், திருக்கோட்டியூர், சீதக்கடல், மாணிக்கக்கிண்கிணி, சந்திரா, ஆணிப்பொன்னால்செய்த, குடந்தைக்கிடந்தானே, உன்னைக்கூவுகின்றான், மைத்தடங்கண்ணி, தேவகிசிங்கமே, காரிகையீர், குவிமுலையீர், வெண்டளையால்