முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
நான்முகன் திருவந்தாதி
தனியன்
சீராமப்பிள்ளை அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
திருமழிசைப்பிரானடி வாழ்த்து
நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக் கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார் மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ மழிசைப் பரனடியே வாழ்த்து |
திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி
2382 |
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய் அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை, சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து |
(2) 1 |
2383 |
தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர் ஆருமறியார் அவன்பெருமை, μரும் பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும் அருள்முடிவ தாழியான் பால் |
2 |
2384 |
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும், ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத் தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில் அருபொருளை யானறிந்த வாறு? |
3 |
2385 |
ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும், கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர் இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து |
4 |
2386 |
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம், வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில் ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே, அருநான்கு மானாய் அறி |
5 |
2387 |
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர், சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார் ஈனவரே யாதலால் இன்று. |
6 |
2388 |
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும் நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே நீயென்னை யன்றி யிலை |
7 |
2389 |
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த கூரம்பன் அல்லால் குறை |
8 |
2390 |
குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு |
9 |
2391 |
ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும் பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான் வல்லரே யல்லரே? வாழ்த்து |
10 |
2392 |
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம் தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை வழாவண்கை கூப்பி மதித்து |
11 |
2393 |
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய் மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு |
12 |
2394 |
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக் கூடாக்கு நின்று-ண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும் மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா யணன் |
13 |
2395 |
நாரா யணனென்னை யாளி, நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்தன், பேரான பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு ஆசைப்பட் டாழ்வார் பலர் |
14 |
2396 |
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம் மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை |
15 |
2397 |
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர் தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர் போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய தேராழி யால்மறைத்தா ரால் |
16 |
2398 |
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம் அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு |
17 |
2399 |
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு கூறகக் கீறிய கோளரியை, - வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச் சார்த்தி யிருப்பார் தவம் |
18 |
2400 |
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக் காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம் ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ |
19 |
2401 |
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும் நீயே தவத்தேவ தேவனும், - நீயே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இவை |
20 |
2402 |
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற இவையா எரிவட்டக் கண்கள், - இவையா எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான், அரிபொங்கிக் காட்டும் அழகு? |
21 |
2403 |
அழகியான் தானே அரியுருவன் தானே பழகியான் தாளே பணிமின், - குழவியாய்த் தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே மீனா யுயிரளிக்கும் வித்து |
22 |
2404 |
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த கார்மேக மன்ன கருமால் திருமேனி, நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. |
23 |
2405 |
நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப், - புகழ்ந்தாய் சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய் மனப்போர் முடிக்கும் வகை |
24 |
2406 |
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும் வகையால் வருவதொன் றுண்டே, வகையால் வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும் வயிர வழக்கொழித்தாய் மற்று |
25 |
2407 |
மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை, கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும் கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக் கண்டுகொள் கிற்குமா று |
26 |
2408 |
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை யான்காண வல்லேற் கிது |
27 |
2409 |
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது, இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை தானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை, ஊனொடுங்க எய்தான் உகப்பு. |
28 |
2410 |
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே, மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம் ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால் அன்றிக்கொண் டெய்தான் அவன். |
29 |
2411 |
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில் அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே, வெள்ளத் தரவணையின் மேல். |
30 |
2412 |
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம் தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர் பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும் கருமாயம் பேசில் கதை |
31 |
2413 |
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ ஆய்ந்த குணத்தான் அடி |
32 |
2414 |
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து, கோப்பின்னு மானான் குறிப்பு. |
33 |
2415 |
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த, குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல், தான்கடத்தும் தன்மையான் தாள் |
34 |
2416 |
தாளால் உலகம் அளந்த அசைவேகொல், வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்தலைவாய் நாகத் தணை? |
35 |
2417 |
நாகத் தணைக்குடந்தை வெகா திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத் தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனா வான். |
36 |
2418 |
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு, தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும், அண்டந் திருமால் அகைப்பு. |
37 |
2419 |
அகைப்பில் மனிசரை யாறு சமயம் புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல் எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும், அப்போ தொழியும் அழைப்பு. |
38 |
2420 |
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண, இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை வெருவி யரவொடுங்கும் வெற்பு. |
39 |
2421 |
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற _ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார், கால்வலையில் பட்டிருந்தேன் காண். |
40 |
2422 |
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர, μண விழவில் ஒலியதிர, பேணி வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய், திருவேங் கடமதனைச் சென்று. |
41 |
2423 |
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை, நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும் கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும், அடிக்கமலம் இட்டேத்து மங்கு. |
42 |
2424 |
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள் சடையேற வைத்தானும் தாமரைமே லானும் குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. |
43 |
2425 |
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய், தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி, போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே, போம்குமர ருள்ளீர் புரிந்து. |
44 |
2426 |
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம், பரிந்து படுகாடு நிற்ப, - தெரிந்தெங்கும் தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. |
45 |
2427 |
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென் றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும் வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே, நாடுவளைத் தாடுமேல் நன்று. |
46 |
2428 |
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும், பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் வேடு முடைவேங் கடம். |
47 |
2429 |
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு வானவரைக் காப்பான் மலை. |
48 |
2430 |
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல் பீறக் கடைந்த பெருமான் திருநாமம், கூறுவதே யாவர்க்கும் கூற்று. |
49 |
2431 |
கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங் கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன் உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. |
50 |
2432 |
எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான் தனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு விண்ணெல்லா முண்டோ விலை? |
51 |
2433 |
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர், தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால் விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார், கடமுண்டார் கல்லா தவர். |
52 |
2434 |
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன் அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத தேவரை தேவரல் லாரை, திருவில்லாத் தேவரைத் தேறல்மின் தேவு. |
53 |
2435 |
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார், கற்கின்ற தெல்லாம் கடை. |
54 |
2436 |
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற நிரோத மேனி நெடுமாலே, நின்னடியை யாரோத வல்லா ரவர்? |
55 |
2437 |
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு, எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக் கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற் குடனின்று தோற்றா னொருங்கு. |
56 |
2438 |
ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான், பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம் ஆனவர்தா மல்லாக தென்? |
57 |
2439 |
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான், மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த் தாயனுக் காக்கினேன் அன்பு. |
58 |
2440 |
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக் கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். |
59 |
2441 |
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின் தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க் கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் |
60 |
2442 |
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை, தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான் இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான், சென்றொன்றி நின்ற திரு. |
61 |
2443 |
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார், கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய், தார்தன்னைச் சூடித் தரித்து. |
62 |
2444 |
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர், விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது. |
63 |
2445 |
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக் காதானை யாதிப் பெருமானை,- நாதானை நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும் சொல்லானை, சொல்லுவதே சூது. |
64 |
2446 |
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை மாதாய மாலவனை மாதவனை, - யாதானும் வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத் தில்லையோ சொல்லீ ரிடம்? |
65 |
2447 |
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு படநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான் வையேனாட் செய்யேன் வலம். |
66 |
2448 |
வலமாக மாட்டாமை தானாக, வைகல் குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை, சீரணனை யேத்தும் திறம். |
67 |
2449 |
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு. |
68 |
2450 |
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம், புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில் மறைப்பொருளும் அத்தனையே தான். |
69 |
2451 |
தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து, ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன் இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச் சென்றாங் கடிப்படுத்த சேய். |
70 |
2452 |
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன், ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன் றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். |
71 |
2453 |
இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும், சொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம் ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே யாவதீ தன்றென்பா ரார்? |
72 |
2454 |
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த, பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த பண்டைத்தா னத்தின் பதி. |
73 |
2455 |
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி, மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன் வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை, அல்லதொன் றேத்தாதென் நா. |
74 |
2456 |
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு. |
75 |
2457 |
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும் ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட மனுவும் சுருதி மறைநான்கும் மாயன் றனமாயை யிற்பட்ட தற்பு. |
76 |
2458 |
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான், எவ்வினையும் மாயுமால் கண்டு. |
77 |
2459 |
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல் கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும் தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங் காரலங்க லானமையா லாய்ந்து. |
78 |
2460 |
ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால் வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம் மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம் வைகுந்தம் காண்பார் விரைந்து. |
79 |
2461 |
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க, கரந்துலகம் காத்தளித்த கண்ணன், - பரந்துலகம் பாடின ஆடின கேட்டு, படுநரகம் வீடின வாசற் கதவு. |
80 |
2462 |
கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய், கற்றமொழி யாகிக் கலந்து. |
81 |
2463 |
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை நலந்தானு மீதொப்ப துண்டே?, - அலர்ந்தலர்கள் இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள் விட்டேத்த மாட்டாத வேந்து. |
82 |
2464 |
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும், பின்னால்தான் செய்யும் பிதிர். |
83 |
2465 |
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு, எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும் கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும் தொழக்காதல் பூண்டேன் தொழில். |
84 |
2466 |
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த, பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த, வில்லாளன் நெஞ்சத் துளன். |
85 |
2467 |
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும் உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய் தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும், என்னொப்பார்க் கீச னிமை. |
86 |
2468 |
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட, சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள் கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு உண்டா னுலகோ டுயிர். |
87 |
2469 |
உயிர்கொண் டுடலொழிய μடும்போ தோடி, அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது. |
88 |
2470 |
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம், வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை, கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. |
89 |
2471 |
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான் பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே தாழா யிருப்பார் தமர் |
90 |
2472 |
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும் அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள் தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன் தாள்தா மரையடைவோ மென்று |
91 |
2473 |
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய், கருவிருந்த நாள்முதலாக் காப்பு. |
92 |
2474 |
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். |
93 |
2475 |
மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு வேம்பும் கறியாகும் ஏன்று. |
94 |
2476 |
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன் கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை இடநாடு காண இனி. |
(2) 95 |
2477 |
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, - இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான். |
(2) 96 |
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - வேங்கடமே, என்றும், பெருமானை, நின்று, கண்டீர், வாழ்த்து, கண்டுகொள், வகையால், பெருமான், சென்று, நான்முகன், நான்முகனும், மேயானை, வாழ்வார், கண்ணன், நிற்கும், புரிந்து, கற்கின்ற, கொண்டு, தாமரைமே, இனியறிந்தேன், இட்டேத்து, தெல்லாம், மால்வண்ணன், வல்லவா, உளன்கண்டாய், தாள்தா, மறந்தறியேன், நாரணனை, மார்பன், நாளும், காப்பு, திருவேங், என்னெஞ்ச, திருவிருந்த, ஆன்றேன், காப்பான், நாரணனே, மாதவனை, செங்கண்மால், கண்டத்தான், சேவடியை, மாலவனை, மாயவனை, திருவந்தாதி, யணன்படைத்தான், நான்முகனை, நின்றானை, தொல்லைமால், மதித்தாய், வல்லேற், மாட்டாத, இதுவிலங்கை, அவனென்னை, பேசில், வித்து, காட்டும், வீடாக்கும், என்னெஞ்சம், யிருப்பார், வைகுந்தம், வாய்ந்த