முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
கண்ணி நிண்சிறுத்தாம்புத் தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை
அவிதிதவிஷயாந்தரச்சடாரே ருபநிஷதாமுபகாநமாத்ரபோக: அபிசகுணவஸாத் ததேகஸேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து. |
இருகவிற்ப நேரிசை வெண்பா
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த, மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள் வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை ஆள்வார் அவரே யரண். |
ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு
937 |
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில், நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால், அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. |
1 |
938 |
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன், மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே, தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி, பாவி னின்னிசை பாடித் திரிவனே. |
2 |
939 |
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை, கரிய கோலத் திருவுருக் காண்பன்நான், பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள் உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே. |
3 |
940 |
நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள், புன்மை யாகக் கருதுவ ராதலின், அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும் தன்மை யான்,சட கோபனென் நம்பியே. |
4 |
941 |
நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும், நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம், செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக் கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே. |
5 |
942 |
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான், நின்று தன்புக ழேத்த வருளினான், குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி, என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. |
6 |
943 |
கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான், பண்டை வல்வினை பாற்றி யருளினான், எண்டி சையு மறிய இயம்புகேன், ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. |
7 |
944 |
அருள்கொண் டாடு மடியவ ரின்புற, அருளி னானவ் வருமறை யின்பொருள், அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான், அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. |
8 |
945 |
மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள் நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான், தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட் புக்க காத லடிமைப் பயனன்றே? |
9 |
946 |
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும் செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான், குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி, முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. |
10 |
947 |
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம் அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு, அன்ப னாய்மது ரகவி சொன்னசொல் நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. |
11 |
ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - கூர்நம்பி, நம்பிக்கு, அன்பன், அருள்கொண், கோபனென், கூர்நகர், தென்குரு, காண்மினே