ஆரூடங்கள் - நட்சத்திர ஆருடம்
நம் முன்னோர்கள், எதிர்காலம் பற்றிய வழிமுறை களை, பிறருக்கு எடுத்துக்காட்ட எத்தனையோ யுத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று நட்சத்திர ஆருடம் அல்லது நட்சத்திரச் சக்கரம்.
அவசரமான காலகட்டத்தில் சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய நேரம் இல்லாதபோதும், அத்தகைய சாஸ்திர நிபுணர்கள் கிடைக்காதபோதும், இந்த ஆருட சாஸ்திரம் நமக்கு முடிவெடுக்கும் ஒரு துணைவனாக நிற்கும்.
இங்கே, அருகில் நீங்கள் பார்ப்பதுதான் 27 நட்சத்திரங்களும் உரிய எண்களும் அடங்கிய நட்சத்திரச் சக்கரம். குறிப்பிட்ட பிரச்னைக்கு பதில்காண விரும்பு கிறீர்கள் எனில், காலையில் எழுந்து குளித்து முடித்து முறைப்படி சமயச் சின்னங்கள் தரித்து, கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு, மனத்தில் இருக்கும் பிரச்னையை-கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அதன் பின், இறைவனுக்கு சமர்ப்பித்த ஒரு பூவை எடுத்து, அதன் காம்பினால் நட்சத்திரக் கட்டத்தைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, ஏதேனும் நட்சத்திரத்தையோ எண்ணையோ தொடவேண்டும்.
இப்போது நட்சத்திரக் கட்டத்தில் பூக்காம்பு தொட்டுக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அல்லது எண் எது என்று பாருங்கள். அந்த நட்சத்திரத்துக்கான பலனை, இங்கு தரப்பட்டிருக்கும் தமிழ்ப்பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த இதழில் 9 நட்சத்திரங்களுக்கு உரிய தமிழ்ப்பாடல்களை தந்துள்ளோம். மீதமுள்ள பாடல்களை அடுத்தடுத்த இதழ்களில் அறிவோம்.
அந்தப் பாடல்களில் நம் மனத்தில் இருக்கும் பிரச்னைகள் அல்லது கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதில் கிடைக்கும். அதனைத் தெரிந்துகொண்டு பிரச்னைகளை அணுக வேண்டும். சில தருணங்களில் எதிர்மறையாகப் பலன்கள் வந்தால், அதற்கு ஏற்ப நமது அணுகுமுறையை மாற்றிகொள்ள வேண்டும் என்பது புலனாகும். அதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதும் தெரியவரும். சித்தர்களால் அருளப்பட்ட இந்தப் பாடல்கள், ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த நட்சத்திரக் கட்டமும் அது அடையாளம் காட்டும் பாடலும் சொல்லும் பலாபலன்களை அறிந்து, காலச்சூழலுக்கு ஏற்ப செயல்படவேண்டும்.
நட்சத்திர ஆருடம் சக்கரத்தின் மூலமாக உங்களின் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள கீழ்காணும் கட்டதில் உள்ள ஏதாவது ஒரு எண்ணை தங்களின் இஷ்ட தெய்வத்தினைத் தியானித்து கிளிக் செய்யவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்