18. கேட்டை - நட்சத்திர ஆருடம்
18. கேட்டை வந்ததால்..
தீதப்பா கேட்டையது உதயமானால் தீவிரமாய் உன் மனையில் பகையே மூளும் வாதனையும் வஞ்சகமும் வறுமைகாட்டும் வகையற்று பிறரிடத்தில் பொருளைச் சேர்க்கும் சாதனையாய் வேண குற்றம் சதியும் நேரும் சலிப்புற்று தெய்வமதை நிந்தை செய்யும் போதனையால் குடிகெடுக்கும் பெருகும் நஷ்டம் பேதலித்தே நாளுக்குநாள் சுகமுண்டாமே! |
பொருள்: கொடும் பகையும், குடிகெடுக்கும் தீயவர்களின் கோணல் வார்த்தையும், நோயின் வேதனையும், சிநேகித வஞ்சமும், வறுமையும், மனச் சலிப்பால் தெய்வ நிந்தனையும் உண்டாகும். உன் பொருளையே பெற்றுக்கொண்டு, உன்னைப் பெரும் மோசத்துக்கு ஆளாக்குவார்கள். அபாண்டமான குற்றங்களும் உன் மீது சுமத்தப்படும். ஆனாலும், தைரியத்தைக் கைவிடாதே! கஷ்டங்கள் எல்லாம் நவகிரகாதிகளின் சகாயத்தால் சீக்கிரமே நன்மையாக மாறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
18. கேட்டை - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்