தினசரி ஹோரைகள் (Daily Horas)

ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.
ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.
ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது.
ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.
சுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன்
பாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி
தேடல் தொடர்பான தகவல்கள்:
தினசரி ஹோரைகள் - Daily Horas - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்