22. திருவோணம் - நட்சத்திர ஆருடம்
22. திருவோணம் வந்ததால்..
சேரவே திருவோண முதயமானால் சீக்கிரமாய் ஜெயங்கூடும் சிக்கவில்லை நேரவே வெளியூருக்கு போக நன்றாம் நிர்மயமாய் யாத்திரையும் போக நன்றாம் தேரவே வியாபாரம் செய்ய நன்றாம் சிறுவர்களை பள்ளிதனிலமர்த்த நன்றாம் கோரவே உந்தன் தெய்வந்தன்னை குடும்பமது செழித்தோங்கும் குணமிதாமே |
பொருள்: நீ எண்ணிய எண்ணமெல்லாம் இன்னல் இல்லாமல் ஜெயமாகும். குடும்பத்தில் சிக்கல் இருக்காது. வியாபார காரியமாக வெளியூருக்குப் போக, லாபம் உண்டாகும். தெய்வ திருத்தலங்களுக்கு யாத்திரை போக, நன்மை உண்டாகும். தொழிலில் மேன்மை உண்டு. பாலர்களை பள்ளியில் அமர்த்த கல்வி ஓங்கும். நாளுக்கு நாள் மேலுக்கு மேலாக உன் குடும்பம் மேன்மை அடையும். குல தெய்வங்களை மறவாமல் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்ய நலம் உண்டாகும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
22. திருவோணம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்