23. அவிட்டம் - நட்சத்திர ஆருடம்
23. அவிட்டம் வந்ததால்..
குணமான அவிட்டத்தின் குறியைக்கேளாய் கொற்றவனே வெகுநாளாய் துயர்க்குள்ளானாய் இனமான பந்துகட்கு எதிரியானாய் இழிவான துஷ்டர்களால் இடர்க்குள்ளானாய் பணம் தேட பாடுபட்டும் நஷ்டமானாய் பாழான நோயினால் பதரலானாய் கனமான சுக்கிரனும் பார்வை பெற்றான் கவலையெல்லாம் இனிவிலகும் கலங்கிடாதே. |
பொருள்: உங்களுக்கு அவிட்டம் உதயமாகியுள்ளது. இதுவரையில் வெகுகாலமாக மிக மிக துயரப்பட்டீர்கள். சொந்தபந்தங்களுக்கும் பகையானீர்கள். பல துஷ்டர்களின் இடரினால், மனக்கவலையும் தொழிலில் நஷ்டமும் வாய்த்தது. நோயாலும் கண்டங்களாலும் பாதிக்கப்பட்டீர்கள். ஆனால், சுக்கிரன் உங்களுக்கு ஏழாமிடத்தில் பார்வை பெற்றிருக்கிறான். ஆதலால், இனி நாளுக்கு நாள் உங்கள் கவலைகளெல்லாம் படிப்படியாக நீங்கும்; க்ஷேமம் அடைவீர்கள்; அச்சம் தேவையில்லை. இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
23. அவிட்டம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்