21. உத்திராடம் - நட்சத்திர ஆருடம்
21. உத்திராடம் வந்ததால்..
வருடமது ஏழுவரை லாபமுண்டு வருத்தமில்லை உத்திராட முதயமானால், பெருமையுறும் குடும்பமதில் செல்வமோங்கும் பொன் பொருளும் நாணயங்கள் மிகவுண்டாகும் உனைக் கெடுக்கும் நோயதுதான் ஒழிந்து போகும் உடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியாகும் சிறுமைப்பட்டு மனையை விட்டு தாண்டினோரும் சீக்கிரத்தில் வீடு வந்து சேருவாரே |
பொருள்: உத்திராடத்தின் பலனால் உனக்கு ஏழு வருஷம் வரையில் அதிக செல்வாக்கும், குடும்பச் சிறப்பும், பொன் பூஷண சேகரிப்பும், உடன்பிறந்த சகோதரர்களால் ஒத்துழைப்பும், பந்துக்களின் உதவியும் உண்டாகும். பீடிக்கும் நோயானது நீடிக்காமல் நீங்கும். சில நாளைக்கு முன்பு வறுமையால் வாடி, தேசாந்திரம் சென்றவரும், சீக்கிரத்தில் வீடு வந்து சேருவார். பத்து நாட்களுக்குள் பலவிதமான துயரங்களும் மாறிப் போகும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
21. உத்திராடம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்