27 ரேவதி - நட்சத்திர ஆருடம்
27 ரேவதி வந்ததால்..
வாழவே ரேவதி தானுதயமானால், வம்புகளும், வழக்குகளும் விலகிப் போகும் தாழவே யிருத்திட்ட வியாபாரந்தான் தனலாபமோங்கிடவே விர்த்தியாகும் சூழவே உந்தனுட குடும்பந்தன்னில் சுகம் பெருத்து மிகத்துயரு மற்றுப்போகும். ஏழையாயிருந்தாலும் இனிமேலுந்தன் இடர் நீங்கி சுகம் பெறுவாய் இனிமேல்தானே! |
பொருள்: ரேவதியின் பலனாவது என்னவென்றால், குடும்பத்தின் பலவித வம்புகளும், வழக்குகளும் விலகும். கீழ்த்தரமாக இருந்த உங்களின் தொழிலானது உயர்வடைந்து மேலோங்கும். உங்களின் துன்பங்கள் எல்லாம் சில நாளைக்குள் இன்பமாக மாறிப்போகும். எதைச் செய்தபோதிலும் ஒரு இன்னலும் ஏற்படாது. உங்களின் எண்ணமும் பலிதமாகும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
27 ரேவதி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்