திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

தன்குறையிது என்னான் தழைகொணரும் தண்சிலம்பன் நின்குறை என்னும் நினைப்பினனாய்ப் - பொன்குறையும் நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ கோள்வேங்கை யன்னான் குறிப்பு. |
31 |
தன் காரியம் இது என்று எனக்கு விளங்கச் சொல்லான், தழையைக் கொண்டு வந்தான், தண் சிலம்பை யுடையான் நின்னான் முடியுங் கருமம் இது என்னுங் கருத்தினனாய்ப் பொன்னிறந் தளரும் நாண்மலர்களையுடைய வேங்கை நிழலின் கண்ணுஞ் சிறிது பொழுதுஞ் சார்ந்திரான், என்னை கொல்லோ! கோள் வேங்கை யன்னானது கருத்து.
2. நெய்தல்
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
பானலம் தண்கழிப் பாடறிந்து தன்னைமார் நூனல நுண்வலையால் நொண்டெடுத்த - கானல் படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம் கடிபொல்லா என்னையே காப்பு. |
32 |
நெய்தற் பூக்களையுடைய தண் கழியின் கண் மீன் பாட்டை யறிந்து தன்னைமார் நூலாற் செய்யப்பட்ட நல்ல நுண்ணிய வலையான் முகந்து எடுத்த படு புலாலைக் கானலின்கணிருந்து காப்பாள் படை நெடுங்கண்ணோக்கம் படு புலாலைக் காக்க மாட்டா, என்னையே காக்கும்அத்துணை.
பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது இருங்கடல் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள் முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே ஒத்தனம் யாமே உளம். |
33 |
பெருங் கடலுள் வெண் சங்கு பெறுதலே காரணமாகத் தங்களுயிரைப் பாதுகாவாது பெருங் கடலினுள்ளே குளிப்பார் தங்கையுடைய இருங் கடலின் முத்தன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே பொருந்தி யாம்மேவியுளம்.
தாமரை தான்முகமாத் தண்அடையீர் மாநீலம் காமர்கண் ஆகக் கழிதுயிற்றும் - காமருசீர்த் தண் பரப்ப! பாயிருள் நீவரின்தாழ் கோதையாள் கண்பரப்பக் காணீர் கசிந்து. |
34 |
தாமரை மலர்கள் தாமே முகமாகக் குளிர்ந்த இலையையுடைய ஈரத்தையுடைய மாநீலமலர்கள் காதலிக்கப்படுங் கண்ணாக, அக்கண்களைக் கழிக்கட்டுயில்வியாநின்ற காமருசீர்த் தண் பரப்பை யுடையானே! பெரிய இருளின் கண் நீ வரிற் றாழ்ந்த கோதையை யுடையாள் இரங்கி அவள் கண்கள் நீர் பரப்பக் காணாய்.
புலால்அகற்றும் பூம்புன்னைப் பொங்கு நீர்ச்சேர்ப்ப! நிலாவகற்றும் வெண்மணல்தண் கானல் - சுலா அகற்றிக் கங்குல்நீ வாரல் பகல்வரின்மார்க் கவ்வையாம் மங்குல்நீர் வெண்திரையின்மாட்டு. |
35 |
புலானாற்றத்தை நீக்கும் பூக்களையுடைய புன்னைப் பொங்குநீர்ச் சேர்ப்பனே! நிலாவினதொளியை வென்று நீக்கும் வெண்மணற் றண் கானலின்கட் கங்குலின் கண்ணே வருதலின், இவளாவி வருந்தலைப் பெருக்கி நீ வாராதொழிக; பகல்வருவையாயிற் பிறரால் அலர் தூற்றப் படுங் கவ்வை பெருகும், மங்குல் போன்ற நீரையும் வெண்டிரையையுமுடைய கடன் மருங்கின்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, கீழ்க்கணக்கு, பதினெண், நூற்றைம்பது, நைவார்க்கே, வெண், பெருங், காமருசீர்த், நீக்கும், முத்தன்ன, தாமரை, காப்பாள், வேங்கை, சங்க, தன்னைமார், கானல், பூக்களையுடைய, என்னையே, புலாலைக்