திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைகள் என்மெலிய வீங்கினவே பாவமென்று - என்மெலிவிற்கு அண்கண்ணி வாடாமை யால்நல்ல என்றுஆற்றான் உண்கண்ணி வாடாள் உடன்று. |
21 |
பொன்றளரும் மேனியாள்வேங்கைப் பூப் போன்ற சுணங்கினையுடைய மென்முலைகள்எற்றுக்கு யான் மெலியப் புடைத்து வீங்கின, என்னேபாவமென்று சொல்லி நீ மெலிதற்குக் காரணமென்னை?நீ கொணர்ந்த குறுங் கண்ணிகள் வாடாத வகை யான்கொண்டு சென்று இவை நல்ல வென்று காட்டினால், அவ்வுண்கண்ணிதான் மாறுபட்டுத் துன்புறாள் வாங்கும்.
கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும் நல்யானை நின்ஐயர் கூட்டுண்டு - செல்வர்தாம் ஓரம்பி னான்எய்து போக்குவர்யான் போகாமல் ஈரம்பி னால்எய்தாய் இன்று. |
22 |
கொல் யானைகளினுடையவெண்மருப்பையுங் கொலைவல்ல புலித் தோல்களையும்நல்யானை போன்ற நின் ஐயர் திறைகொண் டொழுகுவார்,இப்புனத்தின்கட் பிறர் வருவாரை ஓரம்பினா லெய்துபோக்குவர்; யான் பிழைத்துப் போகாதவகை நின் கண்ணென்னுமிரண்டம்பினால் எய்தாய் இன்று.
பெருமலை தாம்நாடித் தேன்துய்த்துப் பேணாது அருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி ஏண்அழிதற்கு யாமே இனம். |
23 |
பெருமாலை யெங்கும்தாம் புக்கு நாடித் தேன் வாங்கி நுகர்ந்து மனத்தின்கண்நுடங்கிப் பாதுகாவாது அருமலை போன்றிருந்த யானைகளைப்பிணித்துக் கொள்வாருடைய தங்கையுடையதிருமுலைக்குத் தோற்று நாணழிந்து மிக்க அறிவு முதலாயினகுணங்கள் நான்கு மழிந்து தளர்ந்துருகி வலியழிதற்குயாமமைந்தேம்.
நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்துஉழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு. |
24 |
நறுவிய குளிர்ந்ததகரம், வகுளம் என்னு மிவற்றைப் பயன்படாத வெறும்புதல் போல விரும்பாது வெட்டியுழுது, விரும்பிச் செந்தினையைவித்துவார் தங்கை பிறர் கொண்ட நோய்க்கு நொந்திரங்கவல்லளோ? ஆராய்ந்து பாராய் தோழி!
கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்து நல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல் நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோ ஏமவேல் ஏந்திஇரா. |
25 |
கொல்லும் இயல்பினையுடையயானைகள் புலியினாற் கொல்லப்படுதலைத் தப்பிமிக்க இயல்பினையுடைய தங்கூட்டத்தைத் தேடுவதுபோலும்; ஆதலான் மிக்க வியல்பினையுடைய அச்சத்தைச்செய்யா நின்ற வேல்போன்ற கண்ணாள் நடுநடுங்கும்வகைவராதொழி வாயாக, அரணாகிய நின் வேலை யேந்திஇரவின்கண்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், தங்கை, நூற்றைம்பது, நின், கீழ்க்கணக்கு, பதினெண், திணைமாலை, நாணழிந்து, மிக்க, நல்லியல், கண்ணாள், வகுளம், இன்று, சங்க, யான், நல்ல, பிறர், அருமலை