திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

நாள்நாகம் நாறும் நனைகுழலாள் நல்கித்தன் பூண்ஆகம் நேர்வளவும் போகாது - பூண்ஆகம் என்றேன் இரண்டாவது உண்டோ மடல் மாமேல் நின்றேண் மறுகிடையே நேர்ந்து. |
16 |
நாக நாண்மலர் நாறும்தேனால் நனையப்பட்ட குழலாள் எனக்கு நல்கித் தன்னுடையபூண்மார்பினை நேருமளவும் என் மார்பினின்றும் அவ்வெலும்பாற்செய்த பூண் போகா தென்று நினக்குச் சொல்லினேன்;இனி இரண்டாவது வேறொரு சொல்லுண்டோ? பனை மடலாற்செய்யப்பட்ட மாவினை யூரத் துணிந்து நின்றேன்,தெருவினடுவே யுடன்பட்டு.
அறிகுஅவளை ஐய இடைம்மடவாய் ஆயச் சிறிதவள்செல் வாள்இறுமென் றஞ்சிச் - சிறிதவள் நல்கும்வாய் காணாது நைந்துருகி என்நெஞ்சம் ஒல்கும்வாய் ஒல்கல் உறும். |
17 |
அறிவேன் யான்அவளை; தன்னுடைய மெல்லிய இடை வருந்த, மடவாய்!சிறிது மவள் நடவாளாக இறும் இறும் என்றஞ்சி அவள்எனக்குச் சிறிதும் அருளு நெறி காணாது தளர்ந்துருகிஎன்னெஞ்சம் அவளொல்கி நடக்குந்தோறும் பின்சென்று தளர்தலுறும்,
என்னாங்கொல் ஈடில் இளவேங்கை நாளுரைப்பப் பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே மருவியா மாலை மலைநாடன் கேண்மை இருவியாம் ஏனல் இனி. |
18 |
தகுதியில்லாத இளவேங்கைநாட்சொல்ல, இனிக் குரலொழிந்து இருவியாய்க் கழியுந்திணையெல்லாம்; எந்தையும் என்னையன்மாருமாகியபோர் வேலவர் இவட்குப் பரிசமாக மிகவிரும்புகின்றது பொன்னாம்; ஆதலாற் பயிலப் பழகிவருந்தன்மையையுடைய மலைநாடன் கேண்மை யினி யென்னாய்விளையுங் கொல்லோ! என்னே!
பாலெத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்துஎன் நெஞ்சம்வாய்ப் புக்குஒழிவு காண்பானோ காண்கொடா அஞ்சாயற் கேநோவல் யான். |
19 |
பால போன்ற வெள்ளருவியைப்பாய்ந்தாடி, பல பூக்களையும் பெய்து பரப்பினாற்போலப்பூங்கொடிகள் பரந்து ஐவனப்புனத்தைக் காப்பாள் கண்கள்,வேல் போன்று எனது நெஞ்சத்தின்கண் வாவிப்புக்குஎன்னுயிரை ஒழிவு காண வேண்டியோ புறம் போகாது உள்ளே அடங்கின;இத்துணை வேண்டுமோ? அவளுடைய அழகிய மேனிக்கேநோவாநின்றேன் யான்.
நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட! கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார் - கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்கு என்னையோ நாளை எளிது. |
20 |
வேங்கை நாண்மலர்பொன்விளைக்கும் நன் மலை நாடனே! கோள் வேங்கைபோற்கொடியார் என் ஐயன்மார்; நீயுங் கோள் வேங்கையனையை யாதலான் இன்று நீயும் இங்கே நிற்கின் மிகப்போர் விளையும; நீ கொணர்ந்த தழையை யாங்கொள்ளாமைக்குவேறு காரண மென்னை? நாளை நீ கொண்டு வந்தால்எளிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, கீழ்க்கணக்கு, பதினெண், நூற்றைம்பது, கேண்மை, கோள்வேங்கை, யான், நாளை, கோள், மலைநாடன், நீயும், காணாது, பூண்ஆகம், சங்க, போகாது, இரண்டாவது, இறும், வேலவர்