பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்; கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவி தாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே, பேஎயோ டானும் பிரிவு. |
126 |
விளங்குகின்ற அருவிகள் பாய்ந்து இழியாநின்ற மலைநாடனே! விலங்கேயாயினும் தன்னோடுகூடி வசித்து மனத்தாற் கலந்தாரை விட்டு நீங்குதல் செய்யாது. (ஆதலால்) தம்மோடு நட்புச்செய்து துன்பத்தை விளைவிக்கும் பேயேயானாலும் விட்டுப் பிரிதல் துன்பத்தைத் தருவதாம்.
கருத்து:தம்மோடு கலந்து பழகி மனம் ஒன்றுபட்ட நண்பினரைப்பிரிதல் துன்பந்தருவதாம்.
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம் முனியார் செயினும், மொழியால் முடியா;- துணியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!- பனியால் குளம் நிறைதல் இல். |
127 |
அலைகள் சினங்கொண்டு வீசுதலால் அலைகின்ற கடலை உடைய நாடனே! பனிநீரால் குளம் நிறைதல் இல்லை. (அதுபோல) தம்முடைய நட்டாரைப் பற்றிய வருத்தம் தீர்தற்கான முயற்சிகளை வெறுப்பின்றியே செய்தாராயினும் அவர் கூறும் முகமனால் அவர் உற்ற துன்பம் நீங்குவதில்லை.
கருத்து: தம் நண்பினர் துன்புறுவரேயானால்அதற்கான முயற்சிகளைச் செயலிற்றாமே செய்து நீக்கவேண்டும்.
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா; யார் நட்பே ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;- கானாட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ, நாய், நட்டால், நல்ல முயல். |
128 |
நறு நாற்றத்தால் பிறவற்றை வென்று இயற்கை மணம் வீசுகின்ற கூந்தலை உடையாய்! நாயோடு நட்புச் செய்தால் சிறந்த உணவாகிய முயல் தசையை உண்பிக்கச் செய்யாதோ? (உண்ணச்செய்யும் அதுபோல) செல்வத்தால் மிகுந்த தாம் நண்பு பூண்டு ஒழுகுவதற்கு (நம்மைஒப்ப) இவரும் செல்வத்தால் தகுதியுடையவரா என்றாராய்தல் வேண்டா வறுமையால் மிக்கவர் நட்பேயானாலும் அவர் நட்பைப் பெறவேண்டும்.
கருத்து:செல்வந்தர் வறுமையுடையாரோடும் நட்புச் செய்தல்வேண்டும்.
'தீர்ந்தேம்' எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம் ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார் பழமை கந்து ஆக, பரியார், புதுமை;- முழ நட்பின், சாண் உட்கு நன்று. |
129 |
இவரிடத்து வேற்றுமையின்றிப் பூண்ட நட்பினை உடையோம் என்று கருதி ஆராயாது தீயனவற்றைச் செய்து தாம் ஊர்ந்த பரிவும் இலராகி சேர்ந்தார் தம்மிடத்து இயல்பாக இருந்த சிறிய அன்பும் இல்லாதவர்களாகி ஒழுகுபவர்களது பழைமையையே பற்றுக் கோடாகக் கொண்டு புதிய நட்பினை நீக்கார் அறிவுடையோர் தீயன செய்யும் நட்பு முழம் இருத்தலைவிட அஞ்சத்தகும் நட்பு சாண்இருத்தலே நல்லது.
கருத்து: தீயன செய்யும் பழைய நட்பைவிட அஞ்சத்தகும் புதியநட்பே நல்லது.
கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப் பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்? விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார், இழித்தக்க காணின், கனா. |
130 |
கண்கள் விழித்தலை ஒத்து மலரும் நெய்தற் பூக்களை உடைய கடல் நாடனே! ஆராய்ந்து தூயதாகக் கொள்ளப்பட்ட நட்பினை உடையாரை பலர் இடையே இகழ்ந்து கூறமாட்டார்கள் அறிவுடையோர் என்ன காரணமெனில் (பிறரிடம் கூறினால்) தமக்கு இழிவைத் தருவனவற்றை கனவின்கண் கண்டாராயின் (தமக்கு இழிவு வரும் என்று கருதி) பிறரிடம் கூறார் (அதுபோல).
கருத்து:அறிவுடையோர் தம் நட்பாரிடத்துள்ள குற்றங்களைதூற்றமாட்டார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், தாம், அறிவுடையோர், பழமொழி, அதுபோல, அவர், நட்பினை, கருதி, பதினெண், தம்மோடு, கீழ்க்கணக்கு, நானூறு, சேர்ந்தார், தீயன, அஞ்சத்தகும், பிறரிடம், தமக்கு, பலர், நல்லது, நட்பு, பரிவும், செய்யும், வேண்டா, நிறைதல், குளம், உற்ற, சங்க, உடைய, நாடனே, செல்வத்தால், நட்புச், முயல், செய்து, ஊர்ந்த