பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர் கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்;-அஃதேபோல், பீடு இலாக்கண்ணும், பெரியோர் பெருந் தகையர்;- ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. |
71 |
அதிலுள்ள மரங்கள் பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அஃதேபோல் - அதுபோலவே அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்) வலியில்லாததற்குப் பெருமையில்லை.
கருத்து: தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர்.
இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும், உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்கு அணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும், மணி மணியாகி விடும். |
72 |
பத்தியாக இருக்கின்ற மலைகளையுடைய நாடனே! இரத்தினத்தின் தன்மை அறியும் ஆற்றலுடையார்க்கு மணி அளறுஆடிக்கண்ணும் இரத்தினம் சேற்றிலே கிடந்து மாசுண்ட இடத்தும் இரத்தினமாகவே தோன்றும். (அதுபோல) கொத்துக்களைப்போன்று சூழலுடையராய் உயர்ந்த குடியின்கண் விளக்கமுற்று வந்தவர்களை எத்தகைய துன்பம் அவர்களைப் பீடித்த இடத்தும் ஆராயும் அறிவினர் உயர்ந்த குடியிலுள்ளார்களாகவே மதிப்பர்.
கருத்து: அறிவுடையோர் உயர்குடிப் பிறந்தார் வறுமை முதலிய எய்தியக்கண்ணும் அவை நோக்காதுஉயர்வாகவே மதிப்பர்.
கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார், மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லால்; பொற்ப உரைப்பான் புக வேண்டா,-கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல். |
73 |
கற்றது ஒன்றில்லையாயினும் நற்குடிப்பிறந்தார் ஒன்றைமட்டும் அறிந்தாரைவிட நற்குணங்களில் மாட்சிமைப்பட மிகச் சிறந்தோர்களே யாவார்கள். கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை அழகுபட விரித்துரைக்கப் புகவேண்டுவதில்லை. கருமாருடைய சேரியில் தையல் ஊசியை விற்கப் புகுவார்இல்லையாதலால்.
கருத்து: உயர்குடிப் பிறப்பின்றிக் கல்வி ஒன்றே உடையாரைவிட உயர்குடிப்பிறந்தார் சாலச் சிறந்தவர்களே யாவார்கள்.
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும், தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்;-சொல்லின், நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப! அறி மடமும் சான்றோர்க்கு அணி. |
74 |
செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே! காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும் ஆராய்ந்து சொல்லுமிடத்து அறிமடமும் சான்றோர்க்குஅழகேயாம்.
கருத்து: அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர் சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற;-பல் ஆ நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும், உரைத்தால், உரை பெறுதல் உண்டு. |
75 |
பலவாகியபசுக்கூட்டங்களைக் காத்த நீண்ட வடிவெடுத்த திருமாலேயாயினும் அவையில் ஒருவனை இகழ்ந்துரைத்தால் (தாமும் அவனால்) இகழ்ச்சியுரையை அடைதல் உண்டு. (ஆகையால்) நல்லோர் பலரும் கூடியிருக்கும் அவையின் இடையே நன்னெறிப்பட்டு ஒழுகும் சான்றோர் எவரையும் மனம் உளையும்படி இகழ்ந்து கூறார்.
கருத்து: சான்றோர் அவை நடுவே,யாரையும் இகழ்ந்து கூறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், இடத்தும், கீழ்க்கணக்கு, நானூறு, பதினெண், பழமொழி, யாவார்கள், பிறந்தார், கற்றது, உண்டு, இகழ்ந்து, கூறார், சான்றோர், உயர்குடிப், காத்த, சான்றோர்க்கு, ஆகையால், பெரியோர், அஃதேபோல், கல்வி, சங்க, செல்வம், அழிந்த, உயர்ந்த, நாடனே, வழுவார், மதிப்பர்