திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும் தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை. |
41 |
துன்பப்படுவோருக்கு ஈதலும், வறுமையான காலத்திலும் ஒழுக்கத்தோடு இருத்தலும், நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறங்களாகும்.
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை, பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல், உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும் அழகு என்ப வேளாண் குடிக்கு. |
42 |
சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பிராமணரை அஞ்சி நடத்தலும், பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்கு அழகு.
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும் வஞ்சத்தின் தீர்ந்த பொருள். |
43 |
தீவழிச் செல்லாமலிருப்பதால் செல்வம் உண்டாகும். உடலின் செய்கை அடங்குதலால் மறுபிறப்பில் தெய்வப் பிறப்பு கிடைக்கும். பொய் இன்றி மனம் அடங்குதலால் முக்தி கிடைக்கும். இம்மூன்றும் வஞ்சத்தில் நீங்கிய பொருள்களாகும்.
விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார் புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்தகன்ற காலையும், - இம் மூன்றும் நோயே, உரன் உடையார்க்கு. |
44 |
விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்கும் கொடுக்காத காலையும் அறிவுடையார்க்கு நோய்களாம்.
ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி, ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம் வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர் நிரயத்துச் சென்று வீழ்வார். |
45 |
திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும், இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும், இறப்பை நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் செல்வர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இன்றி, இலக்கியங்கள், மூன்றும், அடங்குதல், திரிகடுகம், பதினெண், கீழ்க்கணக்கு, அடங்குதலால், பகலும், காலையும், உண்ட, கிடைக்கும், அழகு, ஒன்று, சங்க, அன்பு, பொருள், செய்கை, பொய்