நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு

மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்- தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின், புகழ் சால் உணர்வு. |
111 |
வீட்டுக்கு ஒளி மனைவி. மனைவிக்கு அழகு நன்மக்கள். நன்மக்களுக்கு அழகு கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.
மிகைப்பாடல்கள்
வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினால் ஆகும் அறம். |
1 |
பிறரை வைதால் பகை உண்டாகும். வணங்கினால் உறவினர் மிகுவர். பொருளைக் கொடுத்தலால் இன்பம் உண்டாகும். இரக்கத்தினால் அருள் உண்டாகும்.
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் ஒருவன் அறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன் கணனடங்கக் கற்றானும் இல். |
2 |
எல்லாக் கலைகளையும் அறிந்தவன் ஒருவனும் இல்லை. எதனையும் தெரியாதவனும் இல்லை. நல்ல பண்பு இல்லாத குற்றமே உடையவன் ஒருவனும் இல்லை. எல்லாம் கற்றவனும் இல்லை.
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின் நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான் வீவிலா வீடாய் விடும். |
3 |
இன்சொல்லால் நட்பு உண்டாகும். கடுஞ்சொல்லால் கெடு நினைவு உண்டாகும். நயமான சொல்லால் அருள் நெஞ்சம் உண்டாகும். அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறு உண்டாகும்.
முனியார், அரிய முயல்வார்; அவரின் முனியார், அறம் காமுறுவார்; இனிய இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு உயங்கார், அறிவுஉடையார். |
4 |
கோபம் இல்லாதவர், உண்மைப் பொருளை அறிய முயல்பவர், அறத்தினை விரும்புவர், புகழ் வேண்டுபவர், பிறரிடம் இரந்து வாழாதவர், அன்பிற்கு கட்டுப்படுபவர் அறிவுடையவர் ஆவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, உண்டாகும், ஆகும், இலக்கியங்கள், ஒருவன், இல்லை, நான்மணிக்கடிகை, பதினெண், கீழ்க்கணக்கு, அருள், எல்லாம், அன்பிற்கு, ஒருவனும், முனியார், புகழ், விளக்கம், கல்வி, சங்க, மடவாள், சால், அழகு, இனிய, அறம்