இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்கினியது இல். |
26 |
ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே மானம் படவரின் வாழாமை முன்இனிதே ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை கோள்முறையாற் கோடல் இனிது. |
27 |
அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.
ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வினியது இல். |
28 |
ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி ஒளிபட வாழ்தல் இனிது. |
29 |
கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.
நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத நன்றியின் நன்கினியது இல். |
30 |
ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, வாழ்தல், இலக்கியங்கள், இனியவை, இனிதே, பொருளை, பதினெண், நாற்பது, கீழ்க்கணக்கு, உறுதி, இனியது, நினைத்து, முன்இனிதே, மானம், ஊக்கம், சங்க, மாண்பினிதே, வாழாமை