முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.015.திருநாட்டியத்தான்குடி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.015.திருநாட்டியத்தான்குடி

7.015.திருநாட்டியத்தான்குடி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரிநாதேசுவரர்.
தேவியார் - மலர்மங்கையம்மை.
146 |
பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன் பேணா யாகிலும் பெருமையை உணர்வேன் காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால் நானேல் உன்னடி பாடுத லொழியேன் |
7.015.1 |
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே. உனக்கு அணிகலமும், அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன்; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும், யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன்; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும், உன்னை மறவேன்; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும், உன்னை கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும், நானோ, என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன், இஃது என் அன்பிருந்தவாறு.
147 |
கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட் துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால் |
7.015.2 |
உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே, துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே, திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன்; உயர எழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன்; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய்!
148 |
அஞ்சா தேஉனக் காட்செய வல்லேன் பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ |
7.015.3 |
பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களையுடைய, பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே, மேலான இடத்தில் உள்ள, எங்கள் பெருமானே, மேகங்களின் மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே, நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே, வெள்ளிய தலையை ஏந்தியவனே, திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன்; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன்? ஒன்றிற்கும் ஆசைப்படேன்; இஃது என் அன்பிருந்தவாறு.
149 |
கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை நில்லே னல்லேன் நின்வழி நின்றார் வல்லே னல்லேன் பொன்னடி பரவ நல்லே னல்லேன் நானுனக் கல்லால் |
7.015.4 |
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன்; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லாவற்றையும் கற்றேன்; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன்; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன்; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவுமிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன்; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன்; இஃது என் அன்பிருந்தவாறு.
150 |
மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் ஒட்டா யாகிலும் ஒட்டுவன் அடியேன் பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன் நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் |
7.015.5 |
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தளியிருக்கும் நம்பியே, தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலைமகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன்; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும், நான் உனக்கு அடியவனாய், உன்னோடு ஒட்டியே நிற்பேன்; உன் திருவடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும், உன்னைப் பாடுதலை விடமாட்டேன்; உன் புகழைப் பாடியும், உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் உன்னை நான் மறக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு.
151 |
படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடு நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே |
7.015.6 |
மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும், நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே, யாவர்க்கும், தலைவனே, இயமனை உதைத்தவனே, அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால், நாள்பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன். நீ என்னை விட்டு நீங்குவாயாயினும், நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன்; இஃது என் அன்பிருந்தவாறு.
152 |
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன் நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன் |
7.015.7 |
ஐந்து தலைப் பாம்கினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே, தேவர்கட்டுத் தலைவனே, திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் அன்று உனக்கு ஆட்பட்டது, துன்பத்தால் வருந்துதற்கு அன்று; துன்பத்தினின்றும் உய்ந்து, இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன்; அதனால், நீ என்னை விரும்பாதொழியினும், நான் உன்னை விரும்பியே நிற்பேன்; ஆதலின், நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன்; இஃது என் அன்பிருந்தவாறு.
153 |
கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக் பலிதேர்ந் துண்பதொர் பண்புகண் டிகழேன் வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன் நலியேன் ஒருவரை நான்உனை யல்லால் |
7.015.8 |
திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, யான் இம்மானுட வாழக்கையை ஒருபொருளாக நினைத்துச் செருக்கேன்; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால், கண்களில் நீர் பெருகும், ஆதலின் பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும், அதுபற்றி உன்னை இகழேன்; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன்; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும், உன்னை வணங்குதலைத் தவிரேன்; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன்; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு.
154 |
குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள் கண்டா லுங்கரு தேன்எரு தேறுங் தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு நண்டா டும்வயல் தண்டலை வேலி |
7.015.9 |
எருதினை ஏறுகின்ற, எனக்குக் கண்போலச் சிறந்தவனே, நண்டுகள் விளையாடும் வயல்களையும், சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே, சமணரும், சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும், அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன்; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன்; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு, அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன். இஃது என் அன்பிருந்தவாறு.
155 |
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர் |
7.015.10 |
அடியவர்களே, பிற பாடல்களை நீ பாட மறந்தாலும், பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும், சோழனது நாட்டில் உள்ளதும், பழமையான புகழை யுடையதும், ஆகிய திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை, அவனை ஒரு நாளும் மறவாத, திரட்சியமைந்த, பூவை யணிந்த கூந்தலையுடைய, 'சிங்கடி' என்பவளுக்குத் தந்தையாகிய, திருவுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள். பாடின், உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாட்டியத்தான்குடி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாட்டியத், தான்குடி, நம்பியே, அன்பிருந்தவாறு, எழுந்தருளியிருக்கின்ற, குடியில், யாகிலும், உனக்கு, திருநாட்டியத்தான், னல்லேன், உடையவனே, மாட்டேன், உன்னையன்றி, போலும், பெருமையை, கூந்தலையுடைய, நினையேன், நிற்பேன், தலைவனே, யணிந்த, ஒழியேன், கற்றேன், திருமுறை, மறுமையை, அங்ஙனம், பாடியும், எல்லாம், கோட்புலி, நம்பியை, நாளும், சிங்கடி, யிருக்கின்ற, எழுந்தருளி, ஆதலின், திருநாட்டியத்தான்குடியில், அதுபற்றி, பேய்கள், திருச்சிற்றம்பலம், வெள்ளிய, னாகிலும், மாணிக்க, ஒருவரை, நான்உனை, பாடுதலை, விரும்பாதொழியினும், மனத்தால், யாகிலுங், மறவேன், இகழேன், யல்லால், துன்பங்களை, நின்று, ஆடுகின்ற, மனத்தில், வல்லேன், டிகழேன், நிறத்தை, உயர்வுடையவனே, மாணிக்கம், திருநாட்டியத்தான்குடி, உன்னடி